அமெரிக்கா எனக்கு விசா மறுத்ததை கேள்வி பட்டதும் நான் சொன்னது இதுதான்.. ஓபனாக பேசிய பிரதமர் மோடி

post-img
டெல்லி: இந்தியா மீதான உலகின் பார்வை தற்போது மாறியிருக்கிறது என்று கூறிய மோடி, அமெரிக்கா எனக்கு விசா வழங்க மறுத்த போது, நான் செய்தியாளர்கள் சந்திப்பில், ஒருநாள் உலகம் இந்திய விசாவுக்காக லைனில் நிற்கும் என்று கூறினேன். 2005 ஆம் ஆண்டு இவ்வாறு கூறினேன். தற்போது 2025 ஆம் ஆண்டுகிறது. தற்போது இந்தியாவுக்கான காலம் என்பதை என்னால் உணர முடிகிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜெரோதாவின் இணை நிறுவனரான நிகில் காமத் என்பவருடன் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நிகில் காமத் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் மனம் திறந்து பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். குஜராத் கலவரம் சம்பவம் உள்ளிட்ட காரணங்களுக்காக குஜராத்தில் முதல்வராக இருந்த மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்து இருந்தது. இது குறித்து நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது:- ஒரு மாநில முதல்வராக இருந்த எனக்கு அமெரிக்கா விசா மறுத்தது. அன்றைய தினம் நான் பிரஸ் மீட் ஒன்றில் பேசினேன். அப்போது ஒருநாள் இந்திய விசாவுக்காக உலகம் லைனில் நிற்கும் என்றேன். 2005 ஆம் ஆண்டு நான் இவ்வாறு பேசினேன். தற்போது 2025 ஆம் ஆண்டு ஆகிறது. இது இந்தியாவுக்கான காலம் என்பதை தற்போது என்னால் உணர முடிகிறது. இந்தியாவுக்கு மீண்டும் திரும்பாவிட்டால் என்.ஆர்.ஐக்கள் ஒருநாள் வருத்தம் அடைய போகிறீர்கள் என நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன். தற்போது உலகம் மாறி வருகிறது. நான் சமீபத்தில் குவைத் சென்றேன். அங்கு தொழிலாளர்களின் இடத்திற்கு சென்றேன். அப்போது அங்கு வேலை பார்த்த இந்திய தொழிலாளி ஒருவர் எனது மாவட்டத்தில் எப்போது சர்வதேச விமான நிலையம் வரும் என்று கேட்டார். இந்த லட்சியம்தான் 2047 இல் இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும்" என்றார். தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். மோடி பேசியதாவது:- எல்லாவற்றையும் பெற்று வசதியான சூழலில் இருக்கும்போது மக்கள் வெற்றி பெறுவது இல்லை. அந்தவகையில் சவுகரியமான சூழலில் எனது வாழ்நாளை கழிக்காதது எனது அதிர்ஷ்டம் என்றே நான் நினைக்கிறேன். செளகரியமான சூழலுக்கு நான் தகுதியற்றவனாக கூட இருக்கலாம். ஒருபோதும் நான் அதில் இருந்தது இல்லை. இதனால் நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரிந்தது. நான் வாழ்ந்த வாழ்க்கையில் சிறிய விஷயங்கள் கூட எனக்கு நிறைவை கொடுத்தது. ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் கூட துணிச்சலாக முடிவு எடுக்காவிட்டாலும் செளகரியமான சூழலிலிருந்து வெளியே வராவிட்டாலும், முன்னேற்றம் அங்கேயே முடிந்துவிடும். அவர் அந்த சூழலில் இருந்து வெளியே வர வேண்டியிருக்கும். ஒருவர் எந்த துறையிலும் முன்னேற விரும்பினால், வசதியான சூழலை பயன்படுத்தக்கூடாது. துணிச்சலாக முடிவு எடுக்கும் மனநிலைதான் உந்துசக்தியாக இருக்கும். எனது துணிச்சலாக முடிவு எடுக்கும் திறன் இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. துணிச்சலாக முடிவு எடுக்கும் திறன் என்னிடம் பலமடங்கு அதிகமாக உள்ளது. அதற்கு காரணமும் உள்ளது. நான் என்னைப் பற்றி கவலைப்படுவதில்லை. தன்னைப் பற்றி சிந்திக்காத ஒருவருக்கு துணிச்சலாக முடிவு எடுக்கும் திறன் அதிகமாகவே இருக்கும்" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post