184ஐ தாண்டிவிட்டது.. போகி புகைக்கு இடையே.. சென்னையில் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்த காற்றின் தரம்!

post-img
சென்னை: சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. Air Quality Index (AQI) எனப்படும் மதிப்பு 184ஐ தாண்டி உள்ளது. பொதுவாக சென்னையில் இது 60-80 என்ற அளவில் இருக்கும். ஆனால் போக்கி காரணமாக நிலைமை மோசமாகி உள்ளது. போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் மாசுபாடு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது. Air Quality Index (AQI) 180 ஐ தாண்டும் சமயங்களில் அதை சுவாசிக்க கூடாது. இதன் அர்த்தம் அந்த காற்று ஆரோக்கியமற்ற காற்று ஆகும். சென்னையில் இப்போது காற்றின் தரம் அவ்வளவு மோசமாகி உள்ளது. போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து போகிப் பண்டிகையை மக்கள் கொண்டாடினர் .இதனால் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பல பகுதிகளில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடிய பொதுமக்களால் சாலைகள் தெரியாத அளவிற்கு புகை ஏற்பட்டது. சென்னையில் பல பகுதிகளின் Air Quality Index (AQI) இங்கே தரப்பட்டு உள்ளது. இதில் ராயபுரத்தில் மதிப்பு 200ஐ தாண்டி மோசமான நிலையை அடைந்துள்ளது. அபிராமபுரம் 184 அபிராமபுரம் 184 அச்சுதன் நகர் 173 ஆலந்தூர் பேருந்து நிலையம் 199 அந்தோணிப்பிள்ளை நகர் 164 அரும்பாக்கம் 186 சென்னை அமெரிக்க தூதரகம் 190 காந்தி நகர் எண்ணூர் 187 இன்டக் நகர் 187 கொடுங்கையூர் 187 கொரட்டூர் 195 குமாரசாமி நகர் 168 மணலி 186 முத்தமிழ் நகர் 195 நீலங்கரி 161 பெருங்குடி 156 பொத்தேரி 187 ராயபுரம் 216 ஸ்ரீதேவி காலனி 181 ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி 187 திருமுருகன் சாலை 199 வேளச்சேரி ரெஸ். பகுதி 170 விமான சேவை பாதிப்பு: அந்த வகையில் தற்போது சென்னையில் விமான சேவை கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. ஓடுதளம் தெரியாத அளவிற்கு சாலைகளில் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. போகிப் பண்டிகை கொண்டாட்டம் இடையே பழைய பொருட்களை மக்கள் எரித்த காரணத்தால் கடும் காற்று மாசு ஏற்பட்டது. இதனால் சென்னையில் காற்று மாசு அதிகரித்தது. போகி என்பது நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாகும். மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்திக்கு முந்தைய நாள் என்று இது அழைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. போகி நாளில், மக்கள் பழைய விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய விஷயங்களில் கவனம் செலுத்தி மாற்றம் அல்லது மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள். விடியற்காலையில், மக்கள் வீட்டில் மரக் கட்டைகள், மற்ற திட எரிபொருள்கள் மற்றும் பயனற்ற மர சாமான்களைக் கொண்டு நெருப்பை கொளுத்துவார்கள். இதன் மூலம் ஆண்டுக் கணக்குகள் முடிவடைந்து, மறுநாள் அறுவடையின் முதல் நாளில் புதிய கணக்குகள் தொடங்கும். அதாவது தமிழ் புத்தாண்டும் இதற்கு மறுநாள்தான் தொடங்கும். பொங்கல் பண்டிகையின் போது மழை பொழிய வேண்டி இந்திரனை மக்கள் வழிபடுவதும் சில பகுதிகளில் வழக்கம். பழையன கழிதலும், புதியன புகுதலுமே பொங்கல் பண்டிகையின் நோக்கம் ஆகும். கொங்கு பகுதிகளில் இதே நாளில் காப்பு கட்டு விழாக்கள் நடப்பதும் வழக்கம். போகிக்கு மறுநாள் பொங்கல் செய்து சாப்பிடுவார்கள். மகாராஷ்டிராவில், மக்கள் பஜ்ராவில் செய்யப்பட்ட ரொட்டியை டில் தூவி சாப்பிடுகிறார்கள் மற்றும் காய்கறி குழம்புகளை செய்வார்கள், இதில் பாலக், கேரட், பட்டாணி, பச்சை சானா, பப்டி போன்றவை அடங்கும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post