அஞ்சிலே பிஞ்சிலே.. டியூஷனில் மலர்ந்த காதல்.. திடீர்னு காணாமல் போன ஜோடி.. பரபரத்த கர்நாடகா காவல்துறை

post-img
பெங்களூர்: டியூஷனுக்கு சென்ற தங்களது மகள் காணவில்லை என்று பெற்றோர், பதறிப்போய் போலீசில் புகார் தந்துள்ளனர்.. இந்த புகாரின்பேரில் உடனடி தேடுதல் வேட்டை ஆரம்பமானது.. அப்போதுதான் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பெயர் போலீசில் அடிபட்டது. என்ன நடந்தது? கடந்த வாரம், சென்னை எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 16ம்தேதி, பெண் ஒருவர் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் தந்தார்.. அந்த புகார் மனுவில், அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் தன்னுடைய மகன், இளம்பெண் ஒருவரிடம் டியூசன் படித்து வந்ததாகவும், கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டுச்சென்ற மகன், வீட்டுக்கு திரும்பாததால், கண்டுபிடித்துத் தரும்படியாகவும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆசிரியர்: இந்த புகாரின்பேரில் போலீஸாரும், மாயமான சிறுவனை தேடும் பணியில் இறங்கினார்கள்.. அப்போதுதான், டியூஷன் படிக்கும் ஆசிரியையின் 24 வயது பெண்ணும், இந்த 10ம் வகுப்பு சிறுவனும் காதலிப்பதாகவும், இவர்கள் 2 பேரும் தனித்து வாழ்வதற்காக வீட்டை விட்டு ஓடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், அச்சிறுவனை புதுச்சேரியிலிருந்து மீட்டு கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். இதுபோலவே, கர்நாடகாவிலும் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.. மண்டியா மாவட்டம் ஜே.பி.நகர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி, மைனர் சிறுமியை காணவில்லை என்று, பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டபோதுதான், அபிஷேக் கவுடா என்ற ஆசிரியரின் பெயர் அடிபட்டது. சிறுமி காதல்: 25 வயதான இவர், அந்த பகுதியில் டியூஷன் எடுத்து வந்துள்ளார்.. மாயமான சிறுமியும், இந்த டியூஷனில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.. தினமும் டியூஷனுக்கு சென்ற மாணவியிடம், அபிஷேக் கவுடா நெருங்கி பேசியிருக்கிறார்.. ஒருகட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.. ஆனால், அபிஷேக்குக்கு ஏற்கனவே திருமணமாகி, 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. எனினும், சிறுமியின் மனதை மாற்றி, அவரையும் காதலிக்க செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் சிறுமியை தன்னுடன் அழைத்துக்கொண்டு, அபிஷேக் வீட்டை விட்டே சென்றுவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் தந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர வேட்டையை நடத்தினர். அப்போது மண்டியா மாவட்டத்தில் உள்ள மாலவள்ளி பகுதியில் சிறுமியுடன் அபிஷேக் பதுங்கியிருப்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு: இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.. போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் அபிஷேக் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. டியூஷன் ஆசிரியரிடம் தொடர் விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post