Mahakumbh Mela 2025: இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் மகா கும்பமேளா கலை கிராமம்!

post-img
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று முதல் மகா கும்பமேளா நிகழ்வு தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள பல லட்சக்கணக்கான பக்தர்களின் புனித நீராடலுடன் தொடங்கிய மகா கும்பமேளாவில் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கலை கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இன்று முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 40 கோடிக்கும் அதிகமான பக்தர்களை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆன்மீகம், பாரம்பரியம், கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் இந்த புனிதமான சங்கமம், இந்தியாவின் நீடித்த ஒற்றுமையையும் அர்ப்பணிப்பு உணர்வையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மகா கும்பமேளா, ஒரு நிகழ்வு மட்டுமல்ல. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆழமான அனுபவமாகும். 4,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இது இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியங்கள், திறன்களின் இணக்கமான கலவையை பிரதிபலிக்கிறது. மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட மகா கும்பமேளாவில் உள்ள கலை கிராமம், இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை, கலை, ஆன்மீகம், கலாச்சாரத்தை மறக்க முடியாத அனுபவமாக இணைக்கிறது. உத்தரபிரதேச அரசின் ஆதரவுடன், இந்த முயற்சி பக்தர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும். பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மகா கும்பமேளா 2025-ல் நடைபெறும் கலை கிராமம் என்பது ஒரு நிகழ்வு மட்டுமல்ல. இது இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தையும் துடிப்பான நிகழ்காலத்தையும் தலைமுறையினருக்கு தெரிவிக்கும் இடமாக உள்ளது. கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் தேசத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதற்கான கலாச்சார அமைச்சகத்தின் உறுதிப்பாட்டிற்கு கலை கிராமம் ஒரு சான்றாகும். இது ஆன்மீகத்தை கலையுடன் கலக்கிறது. கலாச்சார அமைச்சகமும், உத்தரப்பிரதேச அரசும் வேறு எங்கும் இல்லாத ஒரு கலாச்சார கிட்டத்தட்ட 15,000 கலைஞர்களை ஒன்றிணைத்து, வரலாற்று நகரமான பிரயாக்ராஜில் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன. இந்த நிகழ்வில் பிரபலமான கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. ஷங்கர் மஹாதேவன், மோஹித் சௌஹான், கைலாசு கெர், ஹான்ஸ் ராஜ் ஹன்ஸ், ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி,மைதிலி தாகூர் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. மகா கும்பமேளா - 2025 இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் ஒரு சிறந்த அனுபவமாகவும் இருக்கும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post