மத்திய கிழக்கே நரகமாகிவிடும்! போரில் நேரடியாக இறங்கும் அமெரிக்கா? ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

post-img
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்கிறது. இன்னுமே இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சிலர் ஹமாஸ் வசம் பணைய கைதிகளாக உள்ளனர். இதற்கிடையே பணய கைதிகளை விடுவிக்க இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப், இல்லையென்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டிற்கு மேலாகவே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. கடந்த 2023 அக். மாதம் திடீரென இஸ்ரேல் நாட்டில் அத்துமீறி ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அப்போது முதல் இந்த போர் தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு விவகாரத்தை பைடன் நிர்வாகம் மோசமாகக் கையாண்டதாக விமர்சித்த டிரம்ப், தான் அதிபரானால் உடனடியாக மத்திய கிழக்கு மோதல் முடிவுக்கு வரும் எனக் கூறி வந்தார். இதற்கிடையே விரைவில் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டிரம்ப், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அவரது மார்-ஏ-லாகோ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணைய கைதிகள் குறித்துப் பேசிய அவர், "இது ஹமாஸுக்கும் நல்லது அல்ல.. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் யாருக்கும் நல்லது அல்ல. நரகமே வெடிக்கும் அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம். இதற்கு மேல் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், ஒன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியிருக்கவே கூடாது. அது மிகப் பெரிய தவறு" என்றார். ஹமாஸ் வசம் இப்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அமெரிக்காவைச் சேர்ந்த சிலரும் பணயக்கைதிகளாக உள்ளனர். அவர்களை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தை தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற கேள்விக்குத் தான் டிரம்ப் இப்படி காட்டமாகப் பதிலளித்தார். மேலும், வரும் ஜன. 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்கும் நிலையில், அதற்குள் ஹமாஸ் அனைத்து பணைய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் ன்றும் இல்லையென்றால் மத்திய கிழக்கே மொத்தமாக நரகமாகிவிடும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூட போர் சீக்கிரமே முடிவுக்கு வரும் என்றே குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் தான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து திரும்பிய ஸ்டீவ் விட்கோஃப், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்கப் போவதாகவும் கூறியிருந்தார். டிரம்ப் நிர்வாகத்தினர் இப்படிச் சொன்னாலும் தற்போதுள்ள பைடன் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் இதற்கு நேர்மாறான தகவல்களைக் கூறுகிறார்கள். அதாவது ஹமாஸ் உடனான பேச்சுவார்த்தை மிகவும் கடினமாக இருப்பதாகவும் பணய கைதிகளை மீட்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகவும் பைடன் தரப்பு அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்படி இரு தரப்பும் முரணான தகவல்களைக் கூறி வருவதால் அங்கு உண்மையில் என்ன நிலைமை என்று அறிவதில் குழப்பம் தொடர்கிறது. இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஹமாஸுக்கும் இடையே பல காலமாக மோதல் போக்கு தொடர்ந்தாலும் அது கடந்த 2023 அக். மாதம் தான் போராக வெடித்தது. அன்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டின் உள்ளே புகுந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். மேலும், பலரையும் பணய கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அதற்கு எதிராக இஸ்ரேல் போரை ஆரம்பித்த நிலையில், அது தற்போது வரை தொடர்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post