விஜயகாந்த் ரொம்பவே நம்பிய ஒரு நபர்! கட்சி தாவியவர்! யார் இந்த சந்திரகுமார்?

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியின் வேட்பாளரான வி.சி.சந்திரகுமார், தேமுதிக தலைவர் விஜயகாந்தால் வெளிச்சத்துக்கு வந்தவர். ரசிகர் மன்றத் தலைவராக இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக உயர்ந்தார். ஈரோட்டை சேர்ந்தவர் வி.சி.சந்திரகுமார். இவர் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் இருந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு விஜயகாந்த் கட்சியை தொடங்கியதும் சந்திரகுமார் கொள்ளை பரப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். வி.சி.சந்திரகுமாரின் அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்தே தேமுதிக என சொல்லலாம்.விஜயகாந்திற்கு மட்டுமல்லாமல் இவர் பிரேமலதாவுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். தேமுதிகவில் விஜயகாந்திற்கு அடுத்த இடத்தில் இருந்தார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. அப்போது 44 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து விஜயகாந்த் சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் வாக்குவாதம் செய்தார். அது போல் விஜயகாந்த் இல்லாத நேரங்களில் கூட சந்திரகுமார்தான் கட்சியை நடத்தி வந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் பெரிதும் நம்பிய மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன், பேராவூரணி எம்.எல்.ஏ. அருண்பாண்டியன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன், ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார், சேர்ந்தமங்கலம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ மாஃபா பாண்டியராஜன், எம்எல்ஏ அருள் சுப்பிரமணியன் ஆகிய 8 பேர் தேமுதிகவில் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். விஜயகாந்துக்கு எதிராக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் மனு கொடுத்தனர். 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில்தான் விஜயகாந்த் மிகவும் உடைந்து போய்விட்டார். தான் நம்பியவர்களே தனது முதுகில் குத்திவிட்டார்களே என மிகவும் கலங்கினார். அன்று முதல் அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. எல்லருக்கும் நல்லது செய்து வந்த விஜயகாந்த் வெகு சீக்கிரமே இறைவனடி சேர்ந்ததற்கு இவர்களுடைய துரோகம்தான் காரணம் என தேமுதிகவினர் கருதுகிறார்கள். விஜயகாந்தின் முகத்தை பார்க்கக் கூடாத கடைசி வரை வராமலேயே இவர்கள் இருந்துவிட்டனர். 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார். சந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் போன்ற சிலர் விலகி 'மக்கள் தேமுதிக' என்ற புதிய அமைப்பை தொடங்கினர். அவர்கள் திமுக கூட்டணியை ஆதரித்தனர். சந்திரகுமார் உள்ளிட்ட மூவருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மூவருமே தோல்வியடைந்தனர். இந்த தோல்விக்கு பிறகு, 2016 ஜூன் 16 அன்று, அவர்கள் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி, பின்னர், மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாக அறிவித்தனர். சந்திரகுமார் திமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளராகவும் அறிவிக்கபட்டுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post