அதிமுக ஆர்ப்பாட்டத்தில் டென்ஷன் ஆன காயத்ரி ரகுராம்.. மேடையில் இருந்து இறங்கி சென்றார்.. என்ன நடந்தது?

post-img
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அதிமுக மகளிரணி இணைச்செயலளார் காயத்ரி ரகுராமும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மேடையில் நின்று கொண்டிருந்த காயத்ரி ரகுராம் திடீரென மேடையில் இருந்து கோபத்துடன் கீழே இறங்கி சென்றார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் தான் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். கோகுல இந்திரா, சசி ரேகா, ராஜலட்சுமி மற்றும் அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் உள்பட அதிமுக மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்ட்ட சம்பவத்தை கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து மேடையில் ஒருவர் பின் ஒருவராக நின்றுகொண்டிருந்தனர். காயத்ரி ரகுராம் மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோகுல இந்திரா, மேடையில் நிற்பவர்களை மாறி மாறி நிற்க வைத்துக்கொண்டிருந்தார். அப்படித் தான் காயத்ரி ரகுராமையும் தள்ளி நிற்க வைத்தார். மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்த காயத்ரி ரகுராம் மேடையின் இறுதிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீரென காய்த்ரி ரகுராம் மேடையில் இருந்து கோபத்துடன் கீழே இறங்கி சென்றார். மேடையின் கடைசியில் நிறுத்தப்பட்டதற்காக அவர் கோபத்துடன் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சில பேசிய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றும், மேடையில் வைத்து தன்னை அவமதித்ததாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதனால் தான் நான் மேடையில் இருந்து கீழே இறங்கியதாகவும் அவர் கூறினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post