உலக பணக்காரர்கள் சொத்தில் வெறும் 1%-ஐ வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும்? தெரிஞ்சுக்கோங்க

post-img
நியூயார்க்: 2025ம் ஆண்டுக்கான உலகின் மிகப்பெரும் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இவர்களின் சொத்துக்களில் வெறும் 1 சதவிகிதத்தை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம். போர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டுக்கான முதல் 10 பணக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் இடத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். 1.எலான் மஸ்க் - 421.1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.36.27 லட்சம் கோடி) 2.ஜெஃப் பெசோஸ் - 223.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.20.01 லட்சம் கோடி) 3.லர்ரி எல்லிசன் - 209.7 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.18.06 லட்சம் கோடி) 4.மார்க் ஜுகர்பெர்க் - 202.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.17.4 லட்சம் கோடி) 5.பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் - 168.4 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.14.5 லட்சம் கோடி) 6.லர்ரி பேஜ் - 156 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.13.4 லட்சம் கோடி) 7.செர்கே பிரின் - 149 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.12.8 லட்சம் கோடி) 8.வார்ரென் பஃபெட் - 141.7 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.12.2 லட்சம் கோடி) 9.ஸ்டீவ் பல்மெர் - 124.3 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.10.7 லட்சம் கோடி) 10.ஜென்சன் ஹுவாங் - 127.9 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.10.10 லட்சம் கோடி) இவர்களில் 5வது இடத்தில் உள்ள மெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவர்களுடைய குடும்பத்தை தவிர மற்ற எல்லோருமே அமெரிக்கர்கள்தான். 10 பேரின் சொத்துக்களை கூட்டி பார்த்தால் 1934.2 கோடி பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது. இந்திய மதிப்பில் ரூ.16,66,23,59,32,00,000 என வருகிறது. இதில் ஒரு சதவிகிதம் என்றால் ரூ.1.66 லட்சம் கோடியாகும். அதாகப்பட்டது, நீங்கள் மாதம் ரூ.35,000 சம்பளம் வாங்குகிறீர்கள் எனில், இந்த ரூ.1.66 லட்சம் கோடி பணத்தை சம்பாதிக்க 39.6 'கோடி' ஆண்டுகள் உழைக்க வேண்டும். ஒரு மனிதனின் சராசரி ஆயுட் காலமே வெறும் 50-60 ஆண்டுகள்தான். சரி உலக பணக்காரர்களின் வெறும் 1% சொத்தை (ரூ.1.66 லட்சம் கோடி) வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை பார்க்கலாம். இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக ஓராண்டுக்கு ஒதுக்கக்கூடிய பணத்திற்கு இது ஈடானது. அதுபோல இந்த பணத்தை வைத்துக்கொண்டு 1,443 வந்தே பாரத் ரயில்களையும், 1,328 புல்லட் ரயில்களையும், 1,660 சொகுசு விமானங்களையும் உங்களால் வாங்க முடியும். தமிழ்நாட்டில் மட்டும் சுமாராக 4,873 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதே அளவுக்கு 3 மடங்கு சாலைகளை புதியதாக போட முடியும். ஓராண்டுக்கு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை கற்றுக்கொடுக்க இந்த பணம் போதுமானது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவனைகளை ஒரு வருடத்திற்கு நடத்தவும், புதியதாக மருத்துவ உபகரணங்களை வாங்கவும் இந்த பணம் போதுமானது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு 16 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் என்கிற விகிதத்தில் வீடுகளை கட்டி கொடுக்க முடியும். நீங்களும் நானும் என எல்லோருமே குறைந்தபட்சம் 9-10 மணி நேரம் வரை உழைக்கிறோம். ஆனால் எப்படி ஒரு சிலரால் மட்டும் இவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடிகிறது? இந்த பணத்தை உருவாக்கியவர்கள் யார்? இப்படியான கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமலேயே இருக்கிறது. நம்மை போன்ற சாமானிய மக்களுக்கு வீடு என்பதே பெரிய கனவுதான். அப்படி இருக்கும்போது இவ்வளவு பணத்தை வைத்து உலக பணக்காரர்கள் என்ன செய்வார்கள் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post