தமிழ்நாட்டின் ஓராண்டு பட்ஜெட் தொகை அளவுக்கு சேதம்.. காட்டு தீயால் கதறும் அமெரிக்கா!

post-img
நியூயார்க்: காட்டு தீ வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களை சேர்ந்த மக்கள் ஆபத்தில் சிக்கியிருக்கின்றனர். இதுவரை சுமார் ரூ.4.8 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த தொகை, 2023-2024ம் ஆண்டின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பட்ஜெட் தொகைக்கு சமமானதாகும். 70,000க்கும் அதிகமான மக்கள் உடனடியாக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தீயணைப்புத்துறை உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காற்று மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசி வருவதால் தீயை கட்டுக்குள்கொண்டுவருவது பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது. இந்த கேள்விக்கு அமெரிக்க தீயணைப்பு துறையிடம் பதில் இல்லை. சில யூகங்கள் மட்டுமே இருக்கிறது. அதாவது அமெரிக்காவில் கேம்ப் பயர்(camp fire) மிகவும் சாதாரணம். காட்டுக்குள் சுற்றுலா வருபவர்கள், அங்கே தீ மூட்டி இரவை கொண்டாடி தீர்ப்பார்கள். இப்படி மூட்டப்படும் தீ கவனிக்காமல் விடப்படும்போது அது காட்டு தீ ஏற்பட காரணமாகவிடுகிறது. தவிர, காட்டு பகுதியில் வேண்டும் என்றே தீ வைப்பது, பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பேட்டரிகளில் மூலமாகவும் தீ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் ஏதாவது ஒன்றுதான் அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்துக்கு காரணமாக இருந்திருக்கும் என்று தீயணைப்புதுறையினர் கூறுகிறார்கள். தீ விபத்து ஏற்பட்டிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் மணிக்கு 100 வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்த காற்று மற்ற பகுதிகளுக்கும் தீயை பரப்பி வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை இது குளிர்காலம். ஆனால், இறுதிக்கட்டம். இருந்தும் எப்படி தீ இவ்வளவு வேகமாக பரவி வருகிறது என்பது பலரையும் சந்தேகித்திருக்கிறது. சுமார் 16,000 ஏக்கர் பரப்பளவை காட்டு தீ துவம்சம் செய்திருக்கிறது. வெறும் 36 மணி நேரத்திற்குள் வீடுகள், கால்நடைகளை கட்டி வைக்கும் கொட்டில்கள் என 1000க்கும் அதிகமான கட்டிடங்களை எரித்து சாம்பலாக்கி உள்ளது. தீ வேகமாக பரவி வருவதாலும், கட்டுப்படுத்த முடியாததாலும் பாதிப்புகள் அதிகரித்திருக்கின்றன. தற்போதைய கணக்கீட்டின்படி 57 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.4.8 லட்சம் கோடி வரை பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த தொகை தமிழ்நாட்டின் 2023-2024 பட்ஜெட் தொகைக்கு ஈடானதாகும். தீயை கட்டுக்குள் கொண்டுவர மற்ற மாகாணங்களிலிருந்து தீயணைப்பு வீரர்களை கலிஃபோர்னியாவும், லாஸ் ஏஞ்சல்ஸும் நாடியிருக்கிறது. விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என தீயணைப்பு துறை நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் சுமார் 1800 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 70,000 பேரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மறுபுறம் 1 லட்சம் பேர் அடுத்தகட்ட பாதிப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தீயை அணைக்கும் அளவுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக இருக்கிறது என்று தீயணைப்புதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரபல ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் இருந்திருக்கின்றன. குறிப்பாக ஹாலிவுட் ஜோடியான லெய்டன் மீஸ்டர் மற்றும் ஆடம் ப்ராடியின் ரூ.55 கோடி மதிப்பிலான பிரமாண்ட வீடு எரிந்து சாம்பலாகியுள்ளது. காட்டு தீ காரணமாக ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளுக்கான வாக்களிப்பு 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post