மீண்டும் மீண்டும் அவரே? ஈரோட்டில் "ரிவர்ஸ் கியர்" போடுகிறதா அதிமுக? எடப்பாடி பழனிசாமி டபுள் முடிவு?

post-img
சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் யார் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது.. ஒருவேளை திமுக தனித்து போட்டியிட போகிறதா? என்றுகூட தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவின் நிலைப்பாடு குறித்து, ஒரு ஸ்பெஷல் செய்தி நமக்கு கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்க, காங்கிரஸ் தீவிரமாகி வருகிறது.. "இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை, திமுகவுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இளங்கோவன்: அந்தவகையில், இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் முதல் உள்ளூர் அமைச்சர் முத்துசாமி வரை இதுவே விருப்பமாகவும் உள்ளதாம், ஆனால், சஞ்சய் சம்பத்தை தேர்தலில் நிறுத்த ஈவிகேஎஸ் குடும்பத்திலேயே ஆர்வம் காட்டப்படவில்லையாம். அதுமட்டுமல்ல, ஒரே குடும்பத்துக்கு மீண்டும் மீண்டும் சீட் கொடுக்கக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியிருக்கிறதாம். எனவே, செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் மக்கள் ராஜன் சீட் பெறுவதற்காக முயற்சித்து கொண்டிருக்கிறாராம். கடந்த முறையே இவருக்கு சீட் கிடைக்காததால், இப்போதாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவில் உள்ளாராம். காங்கிரஸ்: ஆனால், இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிட திட்டமிட்டு வருகிறதாம்.. "ஏற்கெனவே 2 முறை காங்கிரஸுக்கு சீட் தந்துவிட்டோம்.. மறுபடியும் மறுபடியும் அவர்கள் வெற்றிபெற வைக்க, நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்? திமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கடந்த முறையே சீட் கேட்டும், நாம் தரவில்லை.. இந்த முறை போட்டியிட ஆர்வமாக இருக்கிறார்.. மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமாரும் ஆர்வமாக உள்ளார்.. இவர்கள் 2 பேருமே முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.. முத்துச்சாமியின் தீவிர ஆதரவாளர்களும் ஆவர்.. முன்னோட்டம்: அதனால், திமுகவே போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால், வரப்போகும் 2026 பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இந்த வெற்றி அமையும் என்றெல்லாம் ஈரோடு திமுக தரப்பினர், மேலிடத்திடம் எடுத்து சொல்லி வருகிறார்களாம். இப்படி எதிர்தரப்பில் யார் போட்டியிடுவது என்று தெரியாமல் இழுபறியில் உள்ள நிலையில், அதிமுகவும் குழம்பிப் போய் கிடக்கிறதாம்.. இதுபற்றிதான் நமக்கு ஒரு பிரத்யேகமான தகவல் கிடைத்துள்ளது.. அதிமுக எடப்பாடி: அந்தவகையில், "ஈரோடு கிழக்கை புறக்கணிக்கலாம் என்பது எடப்பாடியின் முடிவாக இருக்கிறதாம்.. ஆனால், அதிமுகவின் மூத்த முன்னாள் அமைச்சர்களோ, புதிய யோசனை ஒன்றை அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, "மீண்டும் காங்கிரஸ் போட்டியிட்டால் நாம் (அதிமுக) போட்டியிடலாம். ஈசியாக நாம் ஜெயித்துவிட முடியும். குறைந்த பட்சம் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்துவிட முடியும். அதே சமயம், திமுக போட்டியிட்டால் நாம் அதே வித்தியாச வாக்கில் தோற்போம். இது நம்முடைய கட்சிக்கு பலகீனமாகிவிடும்.. அதனால் திமுக போட்டியிட்டால் தேர்தலை புறக்கணிக்கலாம்" என்று யோசனை சொல்ல, "அதுவும் சரிதான். இது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்வோம்" என்று தெரிவித்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. பாஜக: இப்படி அதிமுகவே எந்தமுடிவுக்கும் வராத நிலையில், பாஜக ஒருபடி மேலேபோய் விறுவிறு பணிகளில் இறங்கியிருக்கிறதாம்.. ஒருவேளை அதிமுக போட்டியிடாமல் போனால், அதிமுகவின் வாக்குகளையும் சேர்த்து அள்ள பாஜக காத்திருப்பதாக தெரிகிறது.. எனவே, அதிமுக வாக்குகளையும் ஈர்க்கக்கூடிய பலமான வேட்பாளர் யார்? என்று ஈரோட்டில் வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறதாம்.. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post