கும்பமேளா: பிரயாக்ராஜ் நகரில் பல லட்சம் பேர் புனித நீராடுவது ஏன்? ஏற்பாடுகள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரம்

post-img
இந்தியாவில் இன்று தொடங்கியுள்ள கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர். உலகின் அதிகளவிலான மக்கள் கூடும் விழாவாக இது கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திங்கள்கிழமை தொடங்கியது. அடுத்த ஆறு வாரங்களுக்கு, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி(வேத, புராணங்களில் கூறப்படும் நதி, பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது) ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடுவார்கள். கும்பமேளாவின் போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்குகிறது, ஆன்மாவை தூய்மைப்படுத்துகிறது, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை அடைய உதவுகிறது என்று இந்துக்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், இந்து மதத்தின் இறுதி இலக்கு முக்தி அடைவதாகும். 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் சுமார் 40 கோடி பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அளவில் மிகப்பெரிய இந்தக் கூட்டத்தை விண்வெளியில் இருந்து கூட பார்க்க முடியும். அமெரிக்காவின் திங்கட்கிழமை, ஐந்து முதல் எட்டு மில்லியன் பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாள், புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிழமை நடக்கும் நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அன்று, விடியற்காலையில் சாம்பலைப் பூசி, நாக சாதுக்கள், பிரயாக்ராஜில் உள்ள புனித நதிகளில் நீராடுவார்கள். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு, ஆற்றின் கரையில், 4,000 ஹெக்டேர் பரப்பளவில், பிரமாண்டமான கூடார நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அதாவது கும்பமேளா தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜில் உள்ள பெரிய மைதானத்தின் பல பகுதிகள் முழுமையாக தயார் செய்யப்படாமல் இருந்தன. துறவிகள் மற்றும் பிற பக்தர்களால் அமைக்கப்பட்ட சில முகாம்களில் தண்ணீர் கிடைக்கவில்லை. மின்சாரத் தடையும் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை, அதாவது கும்பமேளா விழா தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜில் உள்ள பெரிய மைதானத்தின் பல பகுதிகள் இன்னும் தயார் செய்யப்பட்டு முடிக்கப்படாமல் காட்சியளிக்கின்றன. துறவிகள் மற்றும் பிற பக்தர்களால் அமைக்கப்பட்ட சில முகாம்களில் தண்ணீர் கிடைக்கவில்லை,மேலும் மின்சாரத் தடைகளும் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான தனிப்பட்ட கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த பலவற்றில் தண்ணீர் இணைப்புகள் இல்லாததால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. நிர்வாக அதிகாரி விவேக் சதுர்வேதி கூறுகையில், "இந்த ஆண்டு பருவமழை முடிய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், கட்டுமான பணிகளுக்கு குறைவான நேரமே கிடைத்தது. அதனால் தயாரிப்பு பணிகள் தாமதமாகியின" என்று தெரிவித்தார். ஆனாலும் "தேவையான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. பார்வையாளர்களை வரவேற்க அனைத்து அமைப்புகளும் தயாராக உள்ளது " என்று விவேக் சதுர்வேதி உறுதியளித்தார். " 650 கிலோமீட்டர் (403 மைல்கள்) தற்காலிக சாலைகளை அமைத்துள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான கூடாரங்கள் மற்றும் கழிப்பறைகளை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கும்பமேளா வெற்றிகரமாக நடப்பதை உறுதி செய்வதற்காக 40,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக உழைத்து வருகின்றனர்" என்றும் சதுர்வேதி தெரிவித்தார். பிப்ரவரி 26 ஆம் தேதி முடிவடையும் கும்பமேளா, யுனெஸ்கோவால் (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு) பாரம்பரிய மிக்க கலாசார நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கும்பமேளாவின் தோற்றம் இந்துக்களின் ஒரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, தேவர்களும் அசுரர்களும் இறவாமைக்கு உறுதியளிக்கும் அமிர்தத்தைப் பெற சண்டையிட்ட போது, பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு இடங்களில் அமிர்தத்தின் சில துளிகள் சிதறி விழுந்தன. எனவே, பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு நகரங்களிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா விழா நடத்தப்படுகிறது. கூடுதலாக, இரண்டு முழு கும்பமேளா விழாக்களுக்கு இடையில் ஒரு அர்த்த கும்பமேளா (பாதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பமேளா நான்கு புனித நகரங்களிலும் (பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக்) கொண்டாடப்படும் அதே வேளையில், முந்தைய கும்பமேளா விழாவிற்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை முறியடிக்கும் அளவிலான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் ஒவ்வொரு முறையும் திரள்கின்றனர். மத குரு மஹந்த் ரவீந்திர புரி, இந்த ஆண்டு நடக்கும் விழா "கூடுதல் சிறப்பானது " என்று குறிப்பிட்டு, அதை "மகா(பெரிய) கும்பம்" என்று விவரித்தார். புராணக்கதையில் கூறப்படும் அமிர்தம் சிந்தப்பட்ட தருணத்தில் இருந்ததைப் போலவே, இப்போது கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இருப்பு உள்ளது என்பதே அந்த சிறப்புக்கு காரணம் என்று பிபிசியிடம் அவர் கூறினார். நிர்வாண நாக சாதுக்கள் (சந்நியாசிகள்) குளிர்ந்த நீரில் மூழ்குவது குமபமேளாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று. வார இறுதியில், சாதுக்கள் குழுக்களாக இணைந்து சத்தம் எழுப்பிக் கொண்டே ஊர்வலமாக கும்பமேளா மைதானத்தை வந்தடைந்தனர். நாக சாதுக்களில் ஒரு குழு, சாம்பல் தடவிய உடல்களுடன், சிலர் நிர்வாணமாக மற்றும் மற்றவர்கள் இடுப்பில் அல்லது சாமந்தி மலர் மாலைகளை அணிந்துகொண்டு, திரிசூலங்கள், வாள்கள் மற்றும் சிறிய மேளம் ஆகியவற்றுடன் அணிவகுத்துச் சென்றது. மற்றொரு குழு, இசைக்குழு, நடனக் கலைஞர்கள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் கொண்ட தேர்களில், பெரும் ஊர்வலமாக வந்தடைந்தது. குறிப்பிட்ட கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் அமைப்பின் அடிப்படையில், கும்பமேளாவுக்கான நீராடும் தேதிகள் மற்றும் நல்ல நேரங்கள் ஜோதிடர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் குளிப்பதற்கு ஆறு புனிதமான நாட்கள் உள்ளன. அவை பின்வருமாறு, ஜனவரி 14 மற்றும் ஜனவரி 29 மற்றும் 3 பிப்ரவரி ஆகிய நாட்களில் ஷாஹி ஸ்னான் அதாவது நாக சாதுக்கள் நீராடுவர். இந்த மூன்று நாட்களும் புனித நாட்களாகக் கருதப்படுகின்றன. கும்பமேளாவில் மிகப்பெரிய கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று 50 முதல் 60 மில்லியன் பக்தர்கள் புனித நீரில் நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் இருந்து விலகி, பிரயாக்ராஜ் நகரம் மகா கும்பமேளா நிகழ்வுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் 200 சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்துக்குச் செல்லும் வழிகளுக்கு புதிய வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்து புராண நூல்களின் கதைகளை சித்தரிக்கும் வண்ணமயமான ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களால் அங்குள்ள சுவர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ள பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்களில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த செபாஸ்டியன் டியாகோவும் ஒருவர். அர்ஜென்டினாவில் இருந்து 90 பேர் கொண்ட குழுவுடன் வருகை தந்த செபாஸ்டியன் டியாகோ, கும்பமேளாவின் பக்தி மற்றும் "ஆன்மீகத்தை நேரில் அனுபவிப்பதற்காக" இந்த பயணத்தை மேற்கொண்டதாக கூறினார். "கங்கையை நோக்கி வரவேண்டும் என்ற ஒரு வலுவான உந்துதல் ஏற்பட்டு நான் இங்கு வந்தேன்"என்று செபாஸ்டியன் டியாகோ கூறுகிறார். மேலும் தொடர்ந்த அவர், "கங்கையுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால், நதியில் நீராடுவேன்" என்றும் தெரிவித்தார். இதுபோன்ற பெரிய அளவில் விழாவை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து துறவிகள் மற்றும் பெரிய மடங்களின் தலைவர்கள் புரிந்து கொண்ட போதிலும், சில பக்தர்களிடமிருந்து வசதிக் குறைவு குறித்து புகார்கள் வந்துள்ளன. பாபா அமர்நாத்ஜி என்ற 60 வயது துறவி, காவி உடை அணிந்து, தனக்கென அமைத்திருந்த சிறிய கூடாரத்தை பிபிசியிடம் காட்டினார். மூன்று மூங்கில் கம்புகளில் மூடப்பட்ட துணி மற்றும் பிளாஸ்டிக் தாள்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டது அக்கூடாரம். முந்தைய சந்தர்ப்பங்களில், நிர்வாகம் வழங்கிய கூடாரங்களில் இலவசமாக தூங்கலாம் என்றும், ஆனால், இந்த முறை அதற்கான வசதி இல்லை என்றும் பாபா அமர்நாத்ஜி குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "காவல்துறை அதிகாரிகள் என்னை இங்கிருந்து துரத்தப் பார்க்கிறார்கள். ஆனால் நான் எங்கே போவேன்? எல்லோரும் இந்த விழா என்னைப் போன்ற சாதுக்களுக்காக என்று கூறுகிறார்கள், ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன் " என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post