விஜய்க்கு இப்போதான் இது தெரியுதா? ஓபிஎஸ் கொடுத்த ரியாக்‌ஷன்!

post-img
சென்னை: "விஜய்க்கு இப்போதுதான் தெரிகிறதா? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே தெரிந்துவிட்டது; தேர்தலுக்கு ஒரு பேச்சு; பிறகு ஒரு பேச்சு என்பது திமுகவின் வாடிக்கை" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இன்னும் நீட் தேர்வு தொடர்ந்து வருவது எதிர்க்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசை விமர்சித்து இன்று பதிவிட்டார். விஜய் வெளியிட்ட பதிவில், "எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது. கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை" எனத் தெரிவித்திருந்தார். தவெக தலைவர் விஜய்யின் இந்தப் பதிவு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "விஜய்க்கு இப்போதுதான் இது தெரிகிறதா? திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே தெரிந்துவிட்டது. தேர்தலுக்கு ஒரு பேச்சு, பிறகு ஒரு பேச்சு என்பது திமுகவின் வாடிக்கை" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post