53 வயதில்.. கெத்தாக வென்று காட்டிய அஜித் குமார்.. தரமான கம்பேக் கற்றுத்தந்த 5 பெரிய பாடங்கள்!

post-img
சென்னை: துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவரின் இந்த வெற்றி முக்கியமான சில பாடங்களை அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் கற்றுக்கொடுத்து உள்ளது. துபாயில் தற்போது நடக்கும் 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமாரின் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை சுட்டிக்காட்டி பெருமைப்படுத்தும் வகையில் அஜித் அந்த ஸ்பான்சர் லோகோவை தனது வாகனத்தில் பயன்படுத்தி இருந்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் செய்திருந்த போஸ்டில், உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய @SportsTN_ (SDAT) Logo-வை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு @SportsTN_ சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம், என்று குறிப்பிட்டு இருந்தார். துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அஜித்குமார் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவரின் இந்த வெற்றி முக்கியமான சில பாடங்களை அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி பலருக்கும் கற்றுக்கொடுத்து உள்ளது. 1. நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்.. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ரேஸில் பங்கேற்று இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து ஸ்பான்சர் கிடைக்கவில்லை. இப்போது அவரே பொருளாதாரத்தை உருவாக்கி.. அவரே அணியை உருவாக்கி.. மற்றவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் உயர்ந்து உள்ளார். அவரே தற்போது ஸ்பான்சர் தரும் நபராக உருவெடுத்து உள்ளார். அவர் காலத்திற்காக காத்திருந்தார்.. அதற்கான உழைப்பையும் போட்டார்! 2. 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் பயிற்சியின் போதே விபத்துக்கு உள்ளானார். ஆனாலும் அவர் அஞ்சி ஒதுங்காமல் தொடர்ந்து தொடரில் கலந்து கொண்டார். 3. அதே சமயம் 24H Dubai 2025 & The European 24H Series Championship - Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார் ஒரு போட்டியில் மட்டும் கலந்து கொண்டு மற்ற போட்டிகளில் இருந்து ஒதுங்கி அணிக்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்தார். எப்போது முன் நிற்க வேண்டும்.. எப்போது விலகி நிற்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்து இருந்தார். இதை பலரும் உணர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயம் . 4. அஜித் சினிமா என்பதை வேலையாகவும்.. கார் ரேஸ், பைக் ரேஸ் என்பதை தனது தனிப்பட்ட ஆர்வமாகவும், தனிப்பட்ட காதலாகவும் வைத்துக்கொண்டு செயல்படுகிறார். இதற்கு இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்தும் உள்ளார். எது தன்னுடைய வேலை.. எது தன்னுடைய passion என்பதை அவர் முறையாக உணர்ந்து உள்ளார். 5. எந்த உயரத்திற்கு சென்றாலும் தலைக்கனம் இல்லாமல்.. தன்னை யாரும் தல என்றோ.. கடவுள் என்றோ அழைப்பதை விரும்பாமல்.. குடும்பத்தோடு சாதாரண மனிதனாக வாழ்வதை நோக்கமாக கொண்டுள்ளார். இதுவும் பலருக்கும் அஜித் எடுத்த பாடம் ஆகும். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post