எஸ்எஸ்ஐ செய்த எக்குத்தப்பு வேலை..பாத்ரூமில் பள்ளி சிறுமிக்கு கொடூரம்! திடுக்கிட்ட திருப்பரங்குன்றம்!

post-img
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தின் போது கோயில் திருவிழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை கோயில் கூடுதல் பணிக்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட எஸ்ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழா உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்த வகையில் மதுரையில் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. அந்த திருவிழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த எஸ்ஐ பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கார்த்திகை தீபத்தின் பொழுது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதைக்கு வந்திருந்தனர். மலையை சுற்றி கிரிவலம் சென்ற பிறகு சுவாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து இருந்ததால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் மதுரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தான் அந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. கார்த்திகை தீப திருநாளில் சம்பவத்தன்று திடீர் நகர் காவல் நிலையத்தை சார்ந்த குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது சாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் 14 வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாக வராததால் கழிவறைக்கு சென்று பார்த்த பெற்றோர் சிறுமி மயங்கிய நிலையில் இருந்ததகைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சைல்ட் லைனில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சைல்ட் லைன் அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட குற்றவாளி சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி கழிவறைக்கு சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய பாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உதவியாளர் ஜெயபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post