நடிகை கமலா காமேஷ் உடல்நிலை குறித்த வதந்தி! மகள் உமா ரியாஸ் மறுப்பு

post-img
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடிப்பில் கலக்கிய நடிகை கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி வதந்தி என்று அவருடைய மகள் உமா ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். கமலா காமேஷ் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக கடந்த ஒரு மணி நேரமாக தகவல்கள் வெளியான நிலையில் அது வதந்தி என உமா ரியாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து நாம் விசாரித்த போது உமா ரியாஸ் கூறுகையில் எனது அம்மா நலமுடன் இருக்கிறார். எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். அவர் என்னுடன் சென்னை வீட்டில் இருந்தார். வயோதிக காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 72 என உமா ரியாஸ் தெரிவித்துள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post