காணும் பொங்கலுக்கு வண்டலூர் Zoo போறீங்களா.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பூங்கா நிர்வாகம்

post-img
சென்னை: காணும் பொங்கலை ஒட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதாவது, "வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இந்த ஆண்டு, பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பொங்கல் தினங்களில் பார்வையாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா 14.01.2025 செவ்வாய்கிழமை: திறக்கப்படும். பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள் UPI, Whatapp மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் பொதுமக்களின் வசதிக்காக கேஷ் கவுண்டர்கள் திறக்கப்படும். உயிரியல் பங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 300 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நிறுத்துமிடத்திலிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை ஏற்றிச் செல்ல இலவச வாகன வசதி சேவை செய்யப்பட்டுள்ளது. 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும். 150 காவலதுறையினர், சென்னை, வேலூர், தருமபுரி மற்றும் விழுப்புரம் வட்டங்களில் இருந்து 115 சீருடை வன ஊழியர்களும் மற்றும் 30 HCC தன்னார்வலர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பார்வையாளர்களுக்காக மருத்துவக் குழுவுடன் கூடிய சிறப்பு உதவி மையம் நான்கு அமைக்கப்படும். 4 மருத்துவக் குழுவுடன் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் எந்த அவசரச் சூழலையும் கையாளும் வகையில் நிறுத்தப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் கிடைக்கும் தற்போதுள்ள கழிப்பறைகளுடன் கூடுதலாக 25 உயர் கழிப்பறைகள் நிறுவப்படும். பார்வையாளர்கள் பிளாஸ்டிக் நிரம்பிய உணவுப் பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மதுபானம் மற்றும் ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன. பூங்கா பார்வையாளர்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர பாட்டில்களைக் கொண்டு வரவும், பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட HO தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பார்வையாளர்களின் வசதியை உறுதி செய்வதற்காக தடையில்லா மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனம் மற்றும் சஃபாரி வாகனம் 15.01.2025 அன்று நிறுத்தப்படும் மற்றும் 14.01.2025 அன்று திறன் அடிப்படையில் செயல்படும். நீலகிரி மந்தி, சிங்க-வால் குரங்கு, இந்தியக் காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற அரிய வகை இனங்களில் சமீபத்தில் பிறந்தவை. பார்வையாளர்கள் பூங்காவில் காணலாம். கிரிஃபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் மற்றும் அனுமான் குரங்கு போன்ற சமீபத்தில் உயிரியல் பூங்காக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகள். பார்வையாளர்கள் பார்க்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, 15.01.2025 மற்றும் 16.01.2025 ஆகிய தேதிகளில் மீன்வளம் மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா போன்ற முடிய அடைப்புகள் முடப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் FLL நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக விலங்குகளை கிண்டல் செய்யவோ அல்லது உணவளிக்கவோ வேண்டாம் என்று அறிவறுத்தப்படுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பூங்கா நிர்வாகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post