நாகையில் காதலனுக்காக அந்த நேரம் ஓடி வந்த சுகன்யா... ஆத்திரப்பட்ட வள்ளிக்கு ஆயுள் தண்டனை

post-img
நாகப்பட்டினம்: நாகை கோட்டைவாசல்படி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசன் என்பவரின் மனைவி வள்ளிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யாகவும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடும் ஆத்திரத்தில் இருந்த வள்ளி, கணவனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தட்டிக்கேட்ட சுகன்யா மீது வள்ளி கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார். இதில் சுகன்யா இறந்து போனார். இந்த வழக்கில் வள்ளிக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை பற்றி பார்ப்போம். கள்ளக்காதல்கள் பலரது வாழ்க்கையை காலிசெய்துள்ளன. திருமணத்தை மீறி உறவுக்கு பல காரணங்கள் இருந்தாலும், வீட்டில் உள்ள பிரச்சனைகளை வெளியில்உள்ள ஆண் அல்லது பெண்ணிடம் விவாதிக்கும் போது ஆறுதல் கூறுவதாக வரும் நட்புகளே கள்ளக்காதலாக மாறிவதாக கூறப்படுகிறது. ஆறுதல் கூறுவதாகவும், உதவி செய்வதாகவும் வரும் நட்புகள் பின்னாளில் வில்லங்கமான காதலாக மாறிவிடுகின்றன. கணவனுக்கு பதில் வேறு ஆணையும், மனைவிக்கு பதில் வேறு பெண்ணையும் விரும்புகிறார்கள். இதில் உறவிலும், சமூகத்திலும் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. கிராமங்களை பொறுத்தவரை கள்ளக்காதல் விவகாரம் தெரிந்தால், கொலை அல்லது தற்கொலையில் தான் பொதுவாக முடிகிறது. நாகப்பட்டினத்தில் நடந்த சம்பவமும் நாகை கோட்டைவாசல்படி பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதாகும் கார்த்திகேசன். இவருடைய மனைவி வள்ளி (30). கார்த்திகேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மனைவி சுகன்யாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கார்த்திகேசனுக்கும், வள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு காா்த்திகேசனுக்கும் அவருடைய மனைவி வள்ளிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கணவன்- மனைவி தகராறில் காா்த்திகேசனின் காதலி சுகன்யா குறுக்கிட்டுள்ளார். கணவனுக்காக பேசியதால் ஆத்திரம் அடைந்த வள்ளி கொதிக்கும் எண்ணெயை எடுத்து சுகன்யா மீது ஊற்றினார். இதில் உடல் வெந்து படுகாயம் அடைந்த சுகன்யா நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாகை டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்திகா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். இதில் சுகன்யா மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த குற்றத்துக்காக வள்ளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் வள்ளியை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post