மொத்தமாய் லாஸ் ஆன லாஸ் ஏஞ்சல்ஸ்..சாம்பல் மட்டும் தான் மிச்சமாச்சு! மோசமான ’ஹாலிவுட்’ நகரத்தின் நிலை!

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கட்டுக் கடங்காமல் பரவிய காட்டுத் தீ காரணமாக பத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருக்கிறார்கள். சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் சேதமடைந்துள்ள நிலையில், 13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து நாட்களாக தொடரும் காட்டுத் தீயால் ஹாலிவுட் சின்னா பின்னமாகியுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் கருகிப்போன கட்டிடங்களும், சாம்பலும் மட்டுமே மிஞ்சி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ். உலக அளவில் திரைத் துறையை ஆட்டிப் படைக்கும் ஹாலிவுட் இங்கு தான் அமைந்திருக்கிறது. ஏராளமான திரைப்பட நிறுவனங்கள், ஷூட்டிங் செய்யப்படும் திரைப்பட நகரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய கோர சம்பவங்களில் ஒன்றாக கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட காட்டு தீ பதிவாகியுள்ளது. ஐந்து நாட்களாக தொடர்ந்து கட்டுக் கடங்காமல் இந்த காட்டு தீ பரவி வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடந்த பகுதிகளில் பற்றிய தீ தற்போது காட்டுத் தீயாக மாறி வருகிறது. இதன் காரணமாக அங்கு வசித்த லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றார். மேலும் பலர் பெரிய வெளியேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. 90-க்கும் மேற்பட்ட முறை மக்கள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. நகரம் முழுவதும் ஆறு பகுதிகள் தீ விபத்துகளால் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மருத்துவமனைகள் பெட்ரோல் பங்குகள் உணவகங்கள் என அனைத்து பகுதியும் கருகி உள்ளன. மாலிபூ பகுதியில் மட்டும் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள் பகுதிகள் கருகி சேதம் அடைந்துள்ளது. தீயை அணைப்பதற்காக அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாயை கொட்டி வருகிறது. தீயணைப்பு பணியில் கனடாவும் இணைந்துள்ள நிலையில் பல ஹாலிவுட் நடிகர்களின் வீடுகள் தீக்கிரையாகியுள்ளது. மேலும் பல பகுதிகள் தீ விபத்து அபாயத்தில் இருக்கிறது. பொதுமக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post