சென்னை அண்ணாசாலையில் போறீங்களா.. குட்நியூஸ்.. போக்குவரத்து போலீஸ் எடுத்த அதிரடி முடிவு

post-img
சென்னை: சென்னை அண்ணா சாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிரிக்கும் விதமாக அண்ணாலை- ஜி.பி. சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் ஜி.பி.சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படாமல் இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் 'யு' டர்ன் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. மெட்ரோ ரயில் பணிகளின்போது முடங்கி இருந்த அண்ணா சாலை, அதன்பிறகு புத்துயிர் பெற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அண்ணா சாலையில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். குறிப்பாக எல்லா வாகனங்களும் சைதாப்பேட்டை சின்னமலை தொடங்கி தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம் வரை இணைந்து செல்வதால் கடும் நெரிசல் ஏற்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது. இதில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைப்பது, சிக்னல்களை குறைத்து யூடர்ன் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஜிபி சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "சென்னை அண்ணாசாலையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணாலை- ஜி.பி. சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணாசாலை- ஜி.பி.சாலை சந்திப்பில் கடந்து செல்வதால் அண்ணாசாலையில் உள்வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. * ஜி.பி. சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி வரும் வாகனங்கள் ஜி.பி.சாலை சந்திப்பில் அனுமதிக்கப்படாமல் இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு எல்.ஐ.சி. எதிரில் 'யு' டர்ன் அனுமதிக்கப்பட்டு டேம்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். * அண்ணாசாலை-வாலாஜா சந்திப்பு (அண்ணா சிலையில்) இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் ஜி.பி. சாலையில் இடதுபுறம் அனுமதிக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம். * அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஜி.பி. சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.பி. சாலையை அடைய மவுண்ட் ரோடு தர்கா அருகே 'யு' டர்னில் அனுமதிக்கப்படும். அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post