சாட் ஜிபிடி நிறுவனர் மீது சொந்த சகோதரியே பாலியல் புகார்! 3 வயது இருந்தபோதே வன்கொடுமை செய்ததாக வழக்கு

post-img
வாஷிங்டன்: உலகின் புகழ்பெற்ற ஏஐ நிறுவனமான சாட் ஜிபிடி நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது அவரது சொந்த சகோதரியே பாலியல் வன்கொடுமை புகார்களை முன்வைத்துள்ளார். சிறு வயதில் தனது சகோதரன் சாம் ஆல்ட்மேன் தன்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது. ஏஐ இந்தளவுக்கு வளர்ச்சி அடைந்ததில் சாட் ஜிபிடிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. சாட் ஜிபிடியின் வெற்றியே மற்ற ஏஐ நிறுவனங்களுக்கு ஒரு உத்வேகமாக இருந்துள்ளது. இதற்கிடையே ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மீது அவரது சொந்த சகோதரி ஆன் ஆல்ட்மேனே சில பகீர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். அதாவது சிறு வயதில் தனது சகோதரன் சாம் ஆல்ட்மேன் தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்தாக மிசோரியின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சிறு வயதில் சாம் ஆல்ட்மேன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1997 மற்றும் 2006 வரையிலான காலகட்டத்தில் தனது சகோதரர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டினார். மிசோரியின் கிளேட்டன் என்ற பகுதியில் அவர்களது சொந்த வீடு இருக்கும் நிலையில், அங்கு இந்த துஷ்பிரயோகம் நடந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 3 வயதாக இருக்கும் போதே தனது சகோதரன் சாம் ஆல்ட்மேன் பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கியதாகக் கூறியிருக்கிறார். தனக்கு 11 வயதாகும் வரை பாலியல் தொல்லை தொடர்ந்ததாகவும் இந்தக் காலகட்டத்தில் பல முறை தனது சகோதரன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இது கடுமையான மன உளைச்சல், மன வேதனையை ஏற்படுத்தியதாகவும் அதில் இருந்து தற்போது வரை மீள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாம் ஆல்ட்மேன் மீது அவரது சொந்த சகோதரியே முன்வைத்துள்ள இந்த பாலியல் புகார்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதற்கிடையே தன் மீதான பாலியல் புகார்கள் குறித்து சாம் ஆல்ட்மேன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தனது தாய் தாயார் கோனி மற்றும் சகோதரர்களான மேக்ஸ் மற்றும் ஜாக் ஆகியோருடன் இணைந்து சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தனது ஆன் ஆல்ட்மேன் மீது தனக்கு அக்கறை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அவருக்கு சில மனநல பிரச்சினை இருப்பதாகவும் தன் மீதான பாலியல் புகார்களுக்கு அது காரணமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எங்கள் குடும்பம் ஆன் ஆல்ட்மேனை நேசிக்கிறது.. அவரது நல்வாழ்வில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு மனநல சிக்கல் வந்தால் அதைச் சமாளிப்பது கடினம். எங்களைப் போலவே பல குடும்பத்தினர் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதை நாங்கள் அறிவோம்" என்று கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ஆன் ஆல்ட்மேனுக்கு உதவிகளைச் செய்து வருவதாகவும் அவரது அனைத்து செலவுகளையும் சமாளிக்க உதவுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவருக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது... உண்மைக்கு மாறான தகவல்களைப் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்தாலும் குடும்பத்தினர் தொடர்ந்து ஆன் அல்ட்மேனுக்கு உதவி வருவதாகவும் இருப்பினும், அவர் தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆன் ஆல்ட்மேன் தனது சகோதரர் மீது பொதுவெளியில் பாலியல் வன்கொடுமை புகார்களை முன்வைப்பது இது முதல்முறை இல்லை.. கடந்த காலங்களிலும் அவர் இதுபோல பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஆனால், சட்ட நடவடிக்கை எடுப்பது இதுவே முதல்முறையாகும். இதற்காக அவர் $75,000க்கு மேல் இழப்பீடு கோரியுள்ளார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post