இனிமேல் நெட் தேர்வு எழுதாமலே.. பேராசிரியர் ஆகலாம்! யு.ஜி.சி கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள்.. என்னென்ன

post-img
சென்னை: நாடு முழுக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளை கட்டுப்படுத்தும் பல்கலைக்கழக ஒழுங்காற்று வாரியமான யு.ஜி.சி பல்வேறு மாற்றங்களை அறிவித்து உள்ளது. இதில் செய்யப்பட்டு உள்ள மாற்றங்களை இங்கே பார்க்கலாம். UGC (Minimum Qualifications for Appointment & Promotion of Teachers and Academic Staff in Universities and Colleges and Measures for the Maintenance of Standards in Higher Education) Regulations, 2025 என்ற பெயரில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை இன்னும் அமலுக்கு வரவில்லை. 1. இனி குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ME அல்லது MTech இல் முதுகலை (PG) பட்டம் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் (நுழைவு நிலை பதவி) பதவிக்கு தகுதி பெறலாம். தற்போது கட்டாயமாக இருக்கும் UGC-NET தேர்வில் தேர்ச்சி பெறாமல் இவர்கள் பேராசிரியர் ஆக முடியும்.. 2. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என்ற புதிய உத்தரவை UGC பிறப்பித்து உள்ளது. பல்கலைக்கழக தேர்வாணையமான யூ.ஜி.சியின் இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை விவாதங்களை சந்தித்து உள்ளது. இதனால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று UGC வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று புதிய விதி அறிவித்து உள்ளது. மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார். இந்த மாற்றப்பட்ட விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது. இதனால் மாநில அரசுகளின் அங்கீகாரம் முழுமையாக பறிக்கப்படும். 3. உதவி பேராசிரியர் பதவிக்கு, 75% மதிப்பெண்களுடன் நான்காண்டு இளங்கலை (UG) பட்டம் அல்லது குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பிஜி பட்டம் (அல்லது அதற்கு சமமான கிரேடு) மற்றும் PhD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர் தகுதியுடையவர். 4. ஒருவரின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் வெவ்வேறு துறைகளில் இருந்தாலும், UGC-NET இல் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுத்து.. அதில் எடுத்துள்ள மார்க் அதிகமாக இருந்தால் அந்த துறையின் ஆசிரியராக பதவி பெற முடியும். அதாவது நீங்கள் கணித மேஜராக இருந்தாலும், நெட் தேர்வில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் ஆங்கில பேராசிரியர் ஆக முடியும். 5. அதேபோல் நீங்கள் அதாவது நீங்கள் கணித மேஜராக இருந்தாலும், பிஎச்டியில் எந்த பிரிவை படித்துள்ளீர்களோ அந்த துறை பேராசிரியர் ஆக முடியும். சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மீண்டும் சர்ச்சை: அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் செயலை தமிழக அரசு எதிர்த்த நிலையில் ஆளுநர்களுக்கு ஆதரவாக யுஜிசி சட்டங்களை கொண்டு வந்துள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post