அமெரிக்க அதிபராகும் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக வாரி வழங்கிய கூகுள்.. எவ்வளவு கோடி தெரியுமா?

post-img
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கான விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை கூகுள் நிறுவனம் வாரி வழங்கி உள்ளது. இதன்படி அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்கும் விழாவிற்கு நன்கொடையாக ரூ.8 கோடியே 58 லட்சம் வழங்கி உள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் கடந்த ஜனவரி 6ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது. கடந்த ஜனவரி 6ம் தேதி நாடாளுமன்றம் கூடிய நிலையில், அந்த அவையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டிரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.. இதையடுத்து, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தொடர்ந்து அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டொனால்டு டிரம்பின் பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்கான நிதியை அமெரிக்காவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் டொனால்டு டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.8 கோடியே 58 லட்சம்) நன்கொடையாக வழங்கி இருக்கிறது. இதே போல உலக புகழ் பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனமும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை அளித்திருக்கிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post