வருமான வரி.. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் அதிகம்.. அசோசேம் எழுப்பிய முக்கிய பிரச்சனை

post-img
டெல்லி: ஹாங்காங்கில் 15 சதவீதம், இலங்கை 18 சதவீதம், வங்கதேசம் 25 சதவீதம், சிங்கப்பூர் 22 சதவீதம் என்ற அளவில் வருமான வரி உள்ளதாகவும், ஆனால் இந்தியாவில் 42.744 சதவீதம் அளவிற்கு உள்ளதாகவும், தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் கூறியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று அசோசேம் வலியுறுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்த சூழலில் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வேகமாக பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றே மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த சூழலில் இந்த பட்ஜெட்டில் வருமான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில்துறை கூட்டமைப்பான அசோசேம் வருமான வரி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்ப்பரேட் வரி விகிதங்கள் உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ள நிலையில், தனிநபர்களுக்கும் அதிக வரி சலுகைகளை உறுதி செய்வதற்காக, தனிநபர் வரி விகிதங்களில் இதேபோன்ற குறைப்பு செய்யப்பட வேண்டும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தனிநபர்களுக்கான அதிக தனிநபர் வரி விகிதம் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஹாங்காங்கில் தனிநபர் வருமானத்தின் அதிகபட்ச விகிதங்கள் 15%, இலங்கையில் - 18%, வங்கதேசத்தில் - 25% & சிங்கப்பூரில் - 22% ஆக உள்ளது. ஆனால், இது இந்தியாவைப் பொருத்தவரையில் 42.744 சதவீதம் (உச்சபட்ச வரி அடுக்கு) என்ற அளவில் மிக அதிகமாக இருக்கிறது. புதிய வரி விகித முறையில் இது 39 சதவீதமாக உள்ளது. அதேசமயம், சாதாரண கார்ப்பரேட் வரி விகிதம் 25.17 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதேபோல் தனிநபர் வருமான வரி விதிப்பு முறையில் இரண்டு முறை பின்பற்றப்படுவது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. எனவே தனிநபர் வருமான வரியை குறைக்க இவற்றை கருத்தில் கொண்டு வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும். தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரி விகிதங்களுக்கு இடையேயான பெரிய இடைவெளி, கார்ப்பரேட் மாதிரிக்கு ஆதரவாக பல கட்டமைப்பு முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. உதாரணமாக, உரிமையாளர் வணிகம் என்று இருப்பது, நிறுவன வடிவத்திற்கு மாறுகிறது" இவ்வாறு அசோசேம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post