பொங்கல் தொடர் விடுமுறை! சென்னையிலிருந்து இங்க இருக்க திருச்சிக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?

post-img
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை என்பதால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால் பலர் விமான சேவையை தேர்வு செய்வர். பொங்கல் பண்டிகை வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ஆம் தேதியான இன்று முதல் தொடர்ந்து ஜனவரி 19ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் என்றாலும் சனி, ஞாயிறு என இரு முறை வருவதால் அதுவும் ஒரு 4 நாட்கள் சேர்ந்து கொண்டது. போதாக்குறைக்கு வரும் 17ஆம் தேதி அரசே விடுமுறையை அறிவித்துவிட்டது. இதனால் 9 நாட்கள் சொளையாக விடுமுறை கிடைத்துவிட்டது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஆயுத பூஜை, ரம்ஜான், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளின் போதும் தொடர் விடுமுறைகளின் போதும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் விமான பயணத்தை கூட நாடுகிறார்கள். இது போன்ற சூழல்களில் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துவிடுகிறது. அந்த வகையில் பொங்கல் விடுமுறையையொட்டியும் விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ. 3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில் இன்றைய தினம் ரூ 17,645 ஆக உயர்ந்துள்ளது. அது போல் சென்னை- திருச்சி இடையே வழக்கமாக ரூ 2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ 14,337 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே வழக்கமாக ரூ 3,485 ஆக விமான கட்டணம் இருந்த நிலையில் இன்றைய தினம் ரூ 16,647 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- தூத்துக்குடி இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 12,866 ஆக உயர்ந்துள்ளது. அது போல் சென்னை - சேலம் இடையே ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 9,579 ஆக உள்ளது. சென்னை- திருவனந்தபுரம் இடையே ரூ 3,296 ஆக இருந்த நிலையில் இன்று ரூ 17,771 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post