சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மரணம்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

post-img
மதுரை: மதுரையைச் சேர்ந்தவர் தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் வயது முதிர்வு காரணமாக காலமானார். ஜெய்பாய் மறைவுக்கு தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. தமிழறிஞரும், முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் பகுதியில் வசித்து வருகிறார். சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ளார். ரஜினியின் சிவாஜி தி பாஸ் படத்திலும் நடித்திருப்பார். மேலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார். இவரது மனைவி ஜெயபாய். இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகன் மற்றும் விமலா என்ற மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஜெய்பாய் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86. இதனை தொடர்ந்து அவரது உடலுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். இதேபோன்று அரசியல் கட்சியினர், பிரமுகர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஜெய்பாய் மறைவுக்கு தமிழஞறிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயபாய் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். நேற்று தத்தனேரியில் ஜெயபாய் இறுதி சடங்குகள் நடந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post