உதயநிதிக்காக நான் குறிவைக்கப்படுவது எனக்கு பெருமை..அன்பில் மகேஷ் ஒன்இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி

post-img
சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனான நெருக்கம் காரணமாகத்தான் என்னை குறி வைக்கிறார்கள் என்றால் அது எனக்கு பெருமை தான், அவரை உயர்த்தி பிடிப்பதால் நான் குறி வைக்கப்படுவேன் என்றால் இன்னும் அவரை தூக்கிப் பிடிப்பேன் என கூறி இருக்கிறார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மேலும் பெரியார் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் ஆளுநர் ரவி தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழிடம் பேசியுள்ளார். ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பெரியார் என்றும் தேவை என நான் பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளேன். பெரியார் என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தவர். ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் நிற்பேன் என பேசிய பெரியாரை ஒழித்துவிட்டு இங்கே யாரும் எதுவும் செய்து விட முடியாது. கடந்த காலங்களில் இருந்த சாதிய தீண்டாமைகள் தற்போது இல்லை என்றாலும் பெரியாரிய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் மூச்சுக்காற்று இருந்தது. இன்றும் நமக்கு அது தேவையா என்பது போன்ற கேள்வி தான் பெரியார் தேவையா என்ற கேள்வி. அண்ணா பல்கலை சம்பவம் குறித்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது கூட அந்த பல்கலைக் கழகத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார். எங்களை எல்லாம் ஆளாக்கியவரின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய அந்த பல்கலைக்கழகம் அதில் நடக்க கூடாத ஒன்று நடந்திருக்கிறது. அதற்கு காரணம் யாராக இருந்தாலும் எந்த பின்புலத்தை சார்ந்தவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கான உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்று கூறியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக குற்றவாளியை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதோடு சட்டத்தில் அடைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இது போன்ற ஒரு சில சம்பவங்களை வைத்து பல ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கல்லூரிகளுக்கு படிக்க வேண்டும் என வரும் மாணவிகளை படிக்க விடாமல் செய்து விடாதீர்கள். புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டதே பள்ளிப்படிப்போடு பெண்கள் என்று விடக்கூடாது கல்லூரி வரை செல்ல வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகம் பல ஆளுநர்களை பார்த்து இருக்கிறது. கலைஞர் காலத்திலிருந்து ஆளுநர்கள் பலரும் இணக்கத்தோடு இருந்திருக்கிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்தை நாடி வந்திருக்கும் ஆளுநர்களை மாண்போடு காத்திருக்கிறோம். ஆளுநர் தேவையா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் நம்மைத் தேடி வந்த ஆளுநரை மாண்போடு நடத்தி இருக்கிறோம். ஆளுநர் அழைத்தபோது தேனீர் விருந்துக்கும் நாங்கள் சென்றிருந்தோம். ஆளுநர் உரையில் இந்தியாவே திரும்பி பார்க்கும் பல திட்டங்கள் இருந்தது அதற்கு காரணமான முதலமைச்சர் குறித்து இருந்தது தமிழகத்திற்கு தேவையான உரிமைகள் குறித்த கேள்வி இருந்தது அதை ஆளுநர் படித்தால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தான் ஆளுநர் உரை ஆனால் அதையெல்லாம் படிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசிய கீதத்தை இசைக்கவில்லை என்பதை காரணமாக கூறி ஆளுநர் வெளியேறுகிறார். ஆளுநர் சென்றது சிறுபிள்ளைத் தனமானது என முதல்வர் கூறியது தான் எங்கள் கருத்து. தமிழகத்தில் எது நடந்தாலும் உடனடியாக என்னை டேக் செய்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறார்கள். மழை பெய்தால் உதயநிதி ஸ்டாலின் எங்கே இருக்கிறாய்? என கேட்கிறார்கள். உண்மையை சொல்ல போனால் ஒரு பிரச்சனை என வரும்போது யாரை அழைக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு நான் பொறுப்பாக இருக்கும்போது எந்த பிரச்சனை என்றாலும் அடுத்த நிமிடம் நான் அங்கு செல்கிறேன். செய்திகளை கேள்விப்பட்ட உடனேயே எங்களது துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த இடத்திற்கே நான் செல்கிறேன். எந்த பிரச்சினையை நான் கேள்விப்பட்டாலும் உடனடியாக அரசியல் குரலாக நான் பார்ப்பதில்லை. அதனை அக்கறை குரலாக ஆதரவு குரலாகத்தான். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனான நெருக்கம் காரணமாக என்னை குறி வைத்தால் அது எனக்கு பெருமை தான். கலைஞருக்கு எனது தாத்தா அன்பில் தோள் கொடுத்தவர். கலைஞர் இருக்கும் போது தமிழ்நாட்டை வழிநடத்த போகிறவர் முதல்வர் ஸ்டாலின் என எனது தந்தை கூறினார். அதையேதான் நானும் சொல்கிறேன். தமிழகத்தை வழிநடத்த போகிற தலைவராகத்தான் உதயநிதி ஸ்டாலினை பார்க்கிறேன். அவரை தோளில் சுமப்பதால் உயர்த்தி பிடிப்பதால் நான் குறி வைக்கப்படுவேன் என்றால் இன்னும் உயர உயர அவரை தூக்கிப் பிடித்துக் கொண்டே தான் இருப்பேன். தமிழக வெற்றிக்கழக மாநாட்டைப் பொறுத்தவரை ஒரு ஆடியோ லான்ச் போல தான் நான் பார்த்தேன். அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவருமே நமது உறவுகள் தான். மூத்தவர்கள், பெண்கள், மாணவிகள் என அனைவருமே ஏதோ ஒரு வகையில் திமுகவால் பலன் பெற்றவர்கள். திமுக அரசின் ஏதோ ஒரு திட்ட மூலம் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் பயன்பெற்று இருப்பார்கள். கூட்டத்தை பார்த்து எல்லாம் திமுக பயப்படுவது கிடையாது" என்றார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post