Gold Rate Today: தங்கம் விலை சவரன் 60 ஆயிரத்தை நெருங்கியது.. இப்படியே போனால் சாமானியர்கள் நிலை எப்படி?

post-img
சென்னை: சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜனவரி 16-ஆம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்து ஒரு சவரன் ரூ 59,120- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் ரூ 2 உயர்ந்து கிராம் ரூ 103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஜனவரி 16-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ 59,120-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ 7390-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருந்தது. அதன் பின்னரும் 22 கேரட் தங்கம் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில் தை மாதம் பிறந்து முகூர்த்த நாட்கள் வரவிருக்கும் நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 400 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16.01.2025- ஒரு சவரன் ரூ.59,120 15.01.2025- ஒரு சவரன் ரூ.58,720 14.01.2025- ஒரு சவரன் ரூ.58,640 13.01.2025- ஒரு சவரன் ரூ.58,720 12.01.2025- ஒரு சவரன் ரூ.58,520 11.01.2025- ஒரு சவரன் ரூ.58,520 10.01.2025- ஒரு சவரன் ரூ.58,280 09.01.2025- ஒரு சவரன் ரூ.58,080 08.01.2025- ஒரு சவரன் ரூ.57,800 07.01.2025- ஒரு சவரன் ரூ 57,720 06.01.2025- ஒரு சவரன் ரூ 57,720 05.01.2025- ஒரு சவரன் ரூ 57,720 04.01.2025- ஒரு சவரன் ரூ 57,720 03.01.2025- ஒரு சவரன் ரூ 58,080 02.01.2025- ஒரு சவரன் ரூ 57,400 01.01.2025- ஒரு சவரன் ரூ 57,200 டிசம்பர் மாதம் தங்கம் விலை: டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு கிராம் ரூ 7150 க்கு விற்பனையானது. அதே போல் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று ஒரு கிராம் ரூ 7,110-க்கு விற்பனை செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திலேயே தங்கம் விலை அதிகரித்தது என்றால் அது டிசம்பர் 11 ஆம் தேதிதான், அன்றுதான் ஒரு கிராம் ரூ 7,285 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் தங்கம் விலை டிசம்பர் 20ஆம் தேதி ஒரு கிராமுக்கு ரூ 7,040 என குறைந்தது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post