மத்திய அரசு வேலை.. 411 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? விண்ணப்பிக்க ரெடியா
- by Anandaraj K
- January 16, 2025
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் (பி.ஆர்.ஓ) காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியை இந்த எல்லைப்புற சாலைகள் அமைப்பு மேற்கொள்கிறது.
பி.ஆர்.ஓ-வில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஆர்ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சமையலர் (ஆண்) - 153
மேஸ்திரி - 172
இரும்பு கொல்லர் - 75
மெஸ் வெயிட்டர் - 11
என மொத்தம் 411 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
கல்வி தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அது மட்டும் இன்றி எல்லைப்புற சாலைகள் அமைப்பு நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். மேஸ்திரி பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கட்டிட கட்டுமானம் பிரிவில் தொழில்துறை பயிற்சிக்கான (Industrial Training) சான்றிதழ் உள்ளிட்டவை அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 24.02.2024 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://marvels.bro.gov.in/Download/Recruitment_Activities_Against_Advt_No01_2025.pdf
Related Post
ரயில்வேயில் வேலை.. 4 ஆயிரம் பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..
December 30, 2024
டிகிரி போதும்.. சென்னையிலேயே ஐடி வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
December 23, 2024
Zoho ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. தென்காசியில் பணி நியமனம்!
December 23, 2024
தெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு 2023, 124 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
6160 பணியிடங்கள்! பாரத ஸ்டேட் வங்கியில் புதிய வேலை அறிவிப்பு!
September 08, 2023
Sainik School அமராவதி நகர் வேலைவாய்ப்பு 2023, 06 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
NHM கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2023, 35 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
Indian Navy Tradesman Mate வேலைவாய்ப்பு 2023, 362 பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
DHS திருவண்ணாமலை வேலைவாய்ப்பு 2023, Pharmacist பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
DGGI வேலைவாய்ப்பு 2023, Tax Assistant, Executive Assistant பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023, 06 Guest Faculty காலியிடங்கள்
September 08, 2023
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2023, 09 Teaching Fellow பணியிடங்கள் உள்ளன
September 08, 2023
Aavin கால்நடை மருத்துவ ஆலோசகர் வேலைவாய்ப்பு 2023
August 25, 2023
கர்நாடகா: . செமிகண்டக்டர் துறையில் புதிய தொழிற்சாலை..!
August 25, 2023
CGHS வேலைவாய்ப்பு 2023, Accountant பணியிடங்கள் உள்ளன
August 20, 2023
போக்குவரத்து துறையில் டிரைவர் பணி நியமன அறிவிப்பு..?
July 26, 2023
NPCIL இல் 'அப்ரண்டிஸ்' பணி வாய்ப்பு...!
June 29, 2023
BYJUs மீண்டும் பணிநீக்கம்.. 1000 பேர் கண்ணீர்..!
June 21, 2023
தென்காசி கைய்ஸ்.... எம்.எஸ்.ஆபீஸ் படிச்சிருக்கீங்களா?
June 15, 2023
லேபாரட்டரி டெக்னீசியன் 332 பேருக்கு பணி வாய்ப்பு..!
June 14, 2023
எழுத்து தேர்வு இல்லாமல் ஐ.சி.எஃப்.,ல் பணி?
June 08, 2023
மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம்...?
May 05, 2023
நோ எக்ஸாம்...! மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்..!
April 25, 2023
மதுரை, திருப்பூர் யூத்ஸ்... ஆவினில் வேலை காத்திருக்கு...!
April 23, 2023