வைரம் நொறுங்கிடுச்சி! மதிப்பே போச்சே! அந்த கல் பின்னாடி ஓடாதீங்க! ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்

post-img
சென்னை: உலக அளவில் தொடர்ந்து வைரத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் விலைமதிப்பற்ற பொருளாக இருந்த வைரத்தின் மதிப்பு சட்டென சரிய தொடங்கி உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக வைரத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் சரிவைக் கண்டுள்ளது, இது முதலீட்டாளர்கள், நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக வைரத்தில் செய்யப்படும் முதலீடு என்பது மிகவும் மதிப்புமிக்க முதலீடாகக் கருதப்படும். ஆனால் வைரத்தின் மதிப்பு இப்போது குறைய காரணம் அதன் மீதான மோகம் குறைந்துள்ளது. அதோடு வைரத்தை தற்போது செயற்கையாக லேபிள் உருவாக்க தொடங்கிவிட்டனர். லேபிள் மூலம் உருவாக்கப்பட்ட வைரம், இயற்கையான வைரத்திற்கு இடையே வேறுபாடுகளையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இது வைரத்தின் மதிப்பு குறைய முக்கிய காரணமாக உள்ளது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது மணிப்பேச்சு பக்கத்தில் விளக்கி உள்ளார். மக்களின் தேர்வுகள் மாறுவதுதான் சரிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதாவது இப்போது பலரும் வைரத்தில் முதலீடு செய்வதை விரும்புவது இல்லை. இளைய தலைமுறையினர், குறிப்பாக மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் தலைமுறையை சேர்ந்தவர்கள் வைரத்தை விரும்பவில்லை. ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட வைரங்கள் கொஞ்சம் விலை கம்மியாக இருப்பதால் அதை வாங்க மக்கள் விரும்புகின்றனர். உலக அளவில் பல நாடுகளில் டயமண்ட் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. முன்பு போல இப்போது வைரம் அரிதான ஒன்று இல்லை. ஒரு விஷயம் எளிதாக கிடைக்கிறது என்றால் அதன் விலையும் கூட குறைவாகவே இருக்கும். அரிதான பொருட்களுக்கு மட்டுமே விலை அதிகமாக இருக்கும். இந்தியாவில் வைரத்தின் விலை கணிசமான வீழ்ச்சியை கடந்த சில மாதங்களில் சந்தித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆறு மாதங்களுக்கு முன்பு ₹2,50,000 விலையில் இருந்த 1 காரட் இயற்கை வைரம், இப்போது சுமார் ₹2,10,000க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது 16% குறைந்துள்ளது. உதாரணமாக நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு வைரம் வாங்கி இருந்தால்.. அதன் இப்போதைய விலை 8400 மட்டுமே. அதிக அளவிலான வைரத்தின் உற்பத்தியும் இந்த சரிவுக்குப் பங்களித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு உற்பத்தி கூடி உள்ளது. வைரச் சுரங்கங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும். 2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தங்கத்தை வாங்குபவர்கள் கூட பெரிய அளவில் வைரத்தை வாங்க விரும்புவது இல்லை என்று கூறப்படுகிறது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post