அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாற்றுங்கள்! அமெரிக்காவில் தடை செய்யப்படும் டிக்டாக்.. கதறும் யூத்கள்!

post-img
நியூயார்க்: இந்தியாவில் ஏற்கனவே டிக்டாக் தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் செயலியைத் தடை செய்யும் சட்டம் அமலுக்கு வர உள்ளது. ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயலி தடை செய்யப்பட உள்ளது. உலகம் முழுக்க இந்தியா தவிர பல நாடுகளில் டிக்டாக் மிகவும் பிரபலமாக உள்ளது. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன. அமெரிக்காவே கிட்டத்தட்ட டிக்டாக் செயலிக்கு அடிமையாகி உள்ளது. அதன்படி டிக்டாக் செயலியை அங்கே வீடியோ போட மட்டுமின்றி தங்களின் பிஸ்னஸ் வேலைகளுக்கு, பொருட்களை விற்க, வகுப்புகளை எடுக்க கூட பயன்படுத்துகின்றனர். நம்ம ஊரில் எப்படி இன்ஸ்ட்டா ரீல்ஸ் இருக்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவில் டிக்டாக் இருக்கிறது. நம்ம ஊரில் இவங்க தலைக்கட்டு என்றால்.. அந்த ஊரில் அவங்க தலைக்கட்டு! இந்த டிக்டாக் செயலி மீது கடுமையான சில புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. டிக்டாக் செயலி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனத்தின் கீழ் இருப்பதால் அமெரிக்காவில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த பைட்டான்ஸ் நிறுவனம் அந்நாட்டு அரசின் proxy நிறுவனம் என்ற புகார் உள்ளது. அதாவது பைட்டான்ஸ் நிறுவனம் சீனாவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இவர்கள் உலகம் முழுக்க மக்களின் டேட்டாவை எடுக்கிறார்கள். இதன் மூலம் சீனா மக்களை கட்டுப்படுத்துகிறது. தங்களின் பொருட்களை விற்கிறது. அதோடு இல்லாமல் பல ரகசிய தகவல்களை கூட திரட்டுகிறது என்று புகார் உள்ளது. ஏற்கனவே அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ தளவாடகங்களில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது. உலகம் முழுக்க பல ராணுவத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை உள்ளது. இந்த நிலையில்தான் அதிபர் பிடன் ஆதரவோடு அமெரிக்காவில் இந்த செயலியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் முறையாக அமலுக்கு வரும் பட்சத்தில் அமெரிக்காவில் செயலியைத் தடை செய்யும் சட்டம் திட்டம் அமலுக்கு வர உள்ளது. ஜனவரி 19, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயலி தடை செய்யப்பட உள்ளது. ஆனால் டிரம்ப் இதை விரும்பவில்லை. இந்த செயலி தடையை டிரம்ப் விரும்பவில்லை. திங்கள் கிழமை அவர் அதிபராகிறார். அமெரிக்க நாட்டின் அதிபராக வெற்றிபெற்றுள்ள டிரம்ப்.. ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். அன்று விடுமுறை தினம் இல்லை என்பதால் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்பு உறுதி செய்யப்படும். இப்போது அதிபராக டொனால்ட் டிரம்ப் வென்று இருந்தாலும்...ஜனவரி 20 தேதி அவரை அவருக்கு அதிபருக்கான் பவர் இருக்காது. ஆனால் பாதுகாப்பு அதிபருக்கு இணையாக வழங்கப்படும். அதே நாள் அமெரிக்க துணை அதிபரும் பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேடி வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். அப்படி இருக்க திட்டமிட்டபடி இந்த செயலி தடை ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டிக்டாக் செயலியின் அமெரிக்க கட்டுப்பாடுகளை மட்டும் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அதை தடை செய்ய மாட்டோம் என்று அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் இதை டிக்டாக் - பைட் டான்ஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post