கல்விக் கூடங்களில் கூட பாதுகாப்பில்லையா? பலி ஆக்கப்படும் மாணவிகள்! உச்ச கட்ட அதிர்ச்சியில் பெற்றோர்!

post-img
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கல்வி நிலையங்களை மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கல்வி நிலையங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் உரிய முறையில் செயல்படுகிறதா? என்பதை அரசு ஆராய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற சிறந்த கல்வி நிறுவனங்களை ஒற்றான சென்னை ஐஐடி மாணவி ஒருவ வளாகத்திற்கு வெளியே கேண்டினில் டீ குடிப்பதற்காக சென்றபோது அங்கு பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மாணவி புகார் அளித்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐஐடி வளாகத்திற்கு வெளியே தேநீர் கடையில் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடைபெற்றதாகவும் இதற்கும் சென்னை ஐஐடிக்கு தொடர்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்களிலும் வெளியையும் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் என்சிசி முகாம் நடத்துகிறேன் என்ற பெயரில் 17 மாணவிகளை நான்கு நாட்கள் பள்ளியில் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் முகாமில் பயிற்சியாளரான சிவராமன் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை அதிகாலையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அந்த புகாரை மறைப்பதற்காக ஒட்டுமொத்த பள்ளி நிர்வாகமே உடந்தையாக இருந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி ஓய்வதற்குள், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT- Trichy) பெண்கள் விடுதி அறையில், அங்கிருந்த மாணவி முன்பே இணையதள பழுது பார்க்க வந்த நபர் பாலியல் ரீதியாக அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக செய்தி வெளியானது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவர்கள் வார்டனிடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அப்போது மாணவியின் உடை குறித்து அவதூறாக பேசிய கல்லூரி விடுதியின் வார்டனான பேபி, அந்த மாணவியை திட்டியும் இருக்கிறார். இதே போல வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளிடம் அத்துமீறிய இரண்டு தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வு கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக தமிழகத்தின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இப்படியாக கல்வி நிலையங்களை மாணவ மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்ப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இருக்கின்றனர். மாணவ மாணவிகள் பாலியல் தொல்லை சம்பவங்களை எதிர்கொள்ளும் போது இந்த குழுக்களில் புகார் அளிக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களே குற்றங்களை மறைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் ஆசிரியர்கள் ,பெற்றோர்களிடம் தங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை சொன்னால் கல்வி பாதிக்கப்படும் அல்லது தங்களையே தவறாக பேசுவார்கள் என மாணவ மாணவிகள் அச்சப்படுவதும் புகார்கள் வெளியே தெரியாமல் போவதற்கு காரணமாக உள்ளது. எனவே பாதிக்கப்படும் மாணவிகள் தங்கள் கல்வி நிலைய நிர்வாகிகள் அல்லது பெற்றோர்களிடம் எந்தவித அச்சமும் இன்றி உரையாட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post