தேவையானவை:1. எள் - 1/2 கிலோ2. நாட்டு வெல்லம் - 1/2 கிலோ3. பச்சரிசி - 50 கிராம்.செய்முறை:1. முதலில் எள்ளை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு, மேல் தோல் நீங்க லேசாக இடித்து வைத்துக்கொள்ளவும்.2. இடித்த எள்ளை வெயிலில் சிறிது நேரம் உலரவைக்கவும்.3. பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து பிறகு சலித்துக்கொள்ளவும்.4. பச்சரிசி, வெல்லம், எள் மூன்றையும் ஒன்றாக உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். (உரல் இல்லாதவர்கள் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்)5. இந்தக் கலவையை எடுத்து எலுமிச்சம் பழ அளவில் உருண்டையாகப் பிடித்து வைக்கவும்.6. சுவையான சத்தான எள் உருண்டை ரெடி...எள் உருண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உங்களுக்கு ரத்த சோகையே வராது.
Weather Data Source: Wettervorhersage 21 tage