தேவையானவை :1. கடலைப்பருப்பு - 1/2 கப்2. தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)3. எலுமிச்சை சாறு - சில துளிகள்4. எண்ணெய் - 1 டீஸ்பூன்தாளிப்பதற்கு :1. கடுகு - 3/4 டீஸ்பூன்2. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை3. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்4. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)5. வரமிளகாய் - 16. கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை:1. முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதில் நீரை ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்து, நன்கு கழுவி குக்கரில் போட்டு, போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, பருப்பின் தன்மைக்கு ஏற்ப 1 அல்லது 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.2. விசில் போனதும் அதனை இறக்கி, நீரை வடித்துவிட்டு, பருப்பை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.3. பிறகு அதில் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து, நன்கு கிளறி, துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறிவிட்டால், சுவையான, சத்தான கடலைப்பருப்பு சுண்டல் ரெடி!!!
Weather Data Source: Wettervorhersage 21 tage