தேவையானவை :
சிக்கன் - அரை கிலோ
முட்டை - 4
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டேபிள் தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் - 1 குழிக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு
செய்முறை :
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
- தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
- அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- சிக்கனும், மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையைச் சேர்த்துக் கிளறவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.
Ingredients for Chicken Egg Pepper :
Chicken-1/2 kg
Egg-4
Small Onion-10g
Ginger-small piece
Garlic-6
Dry Chilly-4
Coriander Powder-1tbsp
Pepper-2tbsp
Salt-as needed
Oil-1tbs
Mustard, Curry Leaves-for frying
Method to make Chicken Egg Pepper :
- Clean the chicken very finely. Slice the boiled egg in to half and remove the yellow part.
- Roast the coriander powder, dry chilly, ginger, garlic, pepper, onion and grind them well. Heat the oil in a pan and fry mustard, curry leaves.
- Mix the grinded masala with chicken and boil them along with water. Add salt as it enough needed.
- When chicken and masala comes in a thick consistency, add the egg and stir them. Slow the flame for few minutes and turn off the stove.