தேவையானவை:
பெரிய நண்டு -1
மிளகு - 2 டீஸ்பூன்(பொடியாக்கியது)
சீரகத்தூள் -அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
லவங்கம் -1
கறிவேப்பிலை -சிறிதளவு
இஞ்சி -சிறுதுண்டு(விழுதாக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் -1 டீஸ்பூன்
பிரியாணி இலை -1
எலுமிச்சம்பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
1.பொடியாக்கிய மிளகை சீரகத்தூளுடன் சேர்க்கவும் இதனுடன் இஞ்சி விழுதையும் சேர்க்கவும். இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சுத்தம் செய்த நண்டில் தடவி, அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், லவங்கம், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். மசால் தடவிய நண்டை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இதன் பிறகு எலுமிச்சம்பழச் சாற்றை பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.
INGREDIENTS for Crab Pepper Soup:
Big Crab-1
Pepper-2tsp (Chopped)
Cumin Seed-1/2tsp
Turmeric Powder-1/2tsp
Cloves-1
Curry Leaves-Little
Ginger-Small Piece (Grinded)
Oil-1tsp
Bay Leaf-1
Lemon Juice-1tsp
Salt-Enough Need
PROCEDURE to make Crab Pepper Soup:
- Mix pepper powder along with cumin seed, then add ginger paste. Mix salt together with above mixture and spread in to crab and allow soaking for half an hour.
- Heat oil a pan, put cloves, bay leaf, curry leaves and season them. Fry the crab together with it. Add enough need water and boil them well. Then pour lemon juice, add salt and serve with hot.