தேவையானவை :
நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம் நறுக்கியது
தக்காளி - 100 கிராம் நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காயë -அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை:
1.நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வாணலியில் வறுத்து அரைக்க வேண்டும்.
2.ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.அதன்பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
3.அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை போதுமான உப்பு சேர்க்கவும். நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து கெட்டியாக வந்ததும் இறக்கிவிடவும்.
Ingredients for Crab Masala :
Crabs - 1 /2 Kg,
Onions - 100 g (Chopped),
Tomatoes - 100 g (Chopped),
Green Chilies - 4 (Chooped),
Chilli Powder - 1 Tsp,
Coriander Powder - 2 Tsp,
Aniseeds - 1 Tsp,
Turmeric Powder - 1 /4 Tsp,
Coconut - Half Cover,
Ginger - Small Piece,
Garlic - 4 cloves,
Curry Leaves - Little,
Salt, Oil - as needed.
Method to make Crab Masala :
- Wash out the Crabs well. Fry the shreded coconut, ginger and garlic. Then grind them well.
- Heat oil in a frying pan then add curry leaves and season it. Then add onion,green chilies, tomatoes one by one and allow it to fry. Then add chilli powder, turmeric powder and coriander powder and allow it to fry well.
- Then add the grinded coconut paste and crabs along with them. Do not add water. Add enough salt to taste. When its thick take down the vessel.
Crab Masala is ready now.