சிக்கன் கட்லெட்(Chicken cutlet)

post-img

தேவையானவை :

சிக்கன் - 1/2 கிலோ

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

பச்சைமிளகாய் - 2 நறுக்கியது

ரொட்டித் தூள் - 25 கிராம்

வெங்காயம் - ஒரு கையளவு

முட்டை - 1

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மைதா - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

செய்முறை :

 

  1. சிக்கனை தோல் நீக்கி எலும்பில்லாமல் வாங்கி சுத்தம் செய்யவும், பிறகு சிக்கனை வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
  2. உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
  3. சிக்கன், உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சைமிளகாய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.
  4. இதை அடித்து வைத்த முட்டையில் முக்கி ரொட்டித் தூளில் போட்டுப் புரட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சாப்பிடவும்.

குறிப்பு

  1. இதே உருண்டையை மைதா, மிளகுத்தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து திக்காக கரைத்து முக்கி ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கலாம்.
  2. இதே முறைப்படி மட்டன் கட்லெட்டும், அசைவத்திற்குப் பதிலாக காய்கறிகள் சேர்த்து வெஜிடபிள் கட்லெட்டும் தயார் செய்யலாம்.

Ingredients for Chicken Cutlet :

 

Chicken - 1 /2 Kg,

Potatoes - 1 /4 Kg,

Green Chilies - 2 (Chopped),

Bread Crumbs - 25 g,

Onion - 1,

Salt - as needed,

Oil - for Seasoning,

Maida - 2 Tsp,

Pepper Powder - 1 /2 Tsp.

 

Method to make Chicken Cutlet :

 

  1. Remove the chicken skins and keep the chicken meat without bones. Wash it and chop it. Then boil the chicken and allow it to cool. then grind the chicken meat in a mixi.  Keep it aside.
  2. Boil the potatoes and peel the skin and knead the boiled potatoes well.
  3. Then mix up the grinded chicken, chopped onions, green chilies and salt. Make this mixture into small sizes like small balls. Rotate the mixture and pat it.
  4. Take this mixture ball and coat with egg cream and apply the bread crumbs on it. Then fry this in boiled oil.
  5. Make this cutlet along with pepper powder, maida flour and salt paste and apply the bread crumbs on it. Then fry them deeply.
  6. We can aslo make Mutton Cutlet , Vegetable Cutlet like this Chicken Cutlet.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER