தேவையானவை :
சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முந்திரி விழுது - 2 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
தயிர் - 1 ஆழாக்கு
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 4 தேக்கரண்டி
பிரெஷ் கிரீம் - 2 தேக்கரண்டி
கறுப்பு உப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் - அரை தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
செய்முறை :
- சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தயிர், கறி மசாலா, கறுப்பு உப்பு, கஸ்தூரி மேத்தி, சிவப்பு கலர் ஆகியவற்றை நன்றாக கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- சிக்கனை ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும். ஊற வைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் அல்லது மைக்ரோவேவ் ஓவனில் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
- தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து, பிரெஷ் கிரீமையும் சேர்க்கவும். பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கும் முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Ingredients for Butter Chicken Masala :
Chicken-1/2 kg
Onion-200g
Ginger, Garlic Paste-1tbsp
Cashew Paste-2tbsp
Kasturi Methi-1tbsp
Garam Masala-1/2 tbsp
Cumin Powder-1/2tbsp
Curd-1cup
Chili Powder-2tbsp
Turmeric Powder-1/2 tbsp
Butter-4tbsp
Fresh Cream-2tbsp
Black Salt-1tbsp
Red Color-1/2tbsp
Cinnamon, Cloves, Cardamom-each 2pie
Method to make Butter Chicken masala :
- Mix the washed chicken, curd, garam masala, salt, kasturi methi, color powder in a bowl and let them marinate for 2 hours.
- Heat butter in a pan and roast the cinnamon, cloves and cardamom. Add chopped onion, ginger, garlic paste, tomato and stir frequently. Add coriander powder, turmeric powder, chili powder, and salt and fry them well.
- Add the remaining masala which is used to marinate the chicken. When hot add water, boil the marinate chicken in fire or use micro oven.
- Add boiled chicken with prepared masala and add fresh cream. Mix cashew nut paste with butter chicken and keep aside from stove.