தேவையானவை :
1. வரகு - 200 கிராம்,
2. உளுந்து - 50 கிராம்,
3. தேங்காய் - 1 கப்
4. இஞ்சி - 1 துண்டு,
5. புளித்த மோர், பச்சை மிளகாய், உப்பு - தேவையான அளவு,
6. சின்ன வெங்காயம் - 10.
செய்முறை :
1. வரகுடன் உளுந்து, இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய், உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு. சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும்.
3. பின் குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.