தேவையானவை :
கொத்துக்கறி - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
கிராம்பு - 2
ஏலக்காய்- 2
முந்திரிப்பருப்பு - 6
இஞ்சி - 15 கிராம்
பூண்டு - 10 பற்கள்
முட்டை - 2
பட்டை - 2
நெய் - 20 கிராம்
மிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை :
1. கொத்துக்கறியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை போட்டு வேக வைக்க வேண்டும்.
2. கொத்துக்கறி நன்றாக வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு கடாயில் சிறிது நெய்யை ஊற்றி மசாலா பொருட்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரிபார்க்கவும். கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
INGREDIENTS for Slice Curry pudding:
Minced meat-200g
Onion-100g
Cloves-2
Cardamom-2
Cashewnuts-2
Ginger-15g
Garlic-10 Flakes
Egg-2
Cinnamon-2
Ghee-200g
Chilly powder-1tbsp
Curry Leaves, Coriander Leaves-little
Dry Chilly-3
Turmeric Powder-1/2tbsp
Salt-little
PROCEEDURE to make slice Curry pudding:
1. Boil well the minced meat. Then add chopped onion, grinded ginger, garlic paste, turmeric powder, salt, chilly powder and cook together well.
2. Drain the minced meat and grind in mixi.
3. Heat ghee in a pan, add prepared masala and season along with chilly and curry leaves.
Stir the grinded meat. Then pour egg in it and add salt to taste.
Garnish with coriander leaves and cashew nuts.