முட்டைக்கோஸ் சாம்பார்

post-img

தேவையானவை :

1. துவரம் பருப்பு - 100 கிராம்2. முட்டைக்கோஸ் - 2 கப் (நறுக்கியது)3. வெங்காயம் - 1 (நறுக்கியது)4. தக்காளி - 1 (நறுக்கியது)5. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்6. கடுகு - 1/2 டீஸ்பூன்7. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்8. வரமிளகாய் - 19. பச்சை மிளகாய் - 110. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்11. பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்12. சாம்பார் பொடி - 1-2 டீஸ்பூன்13. புளி - நெல்லிக்காய் அளவு14. கறிவேப்பிலை - சிறிது15. கொத்தமல்லி - சிறிது16. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

குக்கரில் துவரம் பருப்பபை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்க வேண்டும்.

பின் புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, நன்கு வதக்கி, பின் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறி, அடுத்து புளித் தண்ணீரை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனைப் போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டைக்கோஸ் சாம்பார் ரெடி!!!

Required:

  1. Pulses - 100 g2. Cabbage - 2 cups (chopped)3. Onions - 1 (chopped)4. Tomatoes - 1 (chopped)5. Oil - 1 tbsp6. Mustard - 1/2 tsp7. Lentils - 1/2 tsp8. Chili - 19. Green Chili - 110. Turmeric powder - 1/4 tsp11. Pumpkin Powder - 1/4 tsp12. Sambar powder - 1-2 tbsp13. Tamarind - Gooseberry size14. Curry leaves - a little15. Coriander - a little16. Salt - required amount

Recipe:

  1. Put the lentils in the cooker and add two cups of water, turmeric powder and fennel powder. Cover the cooker and let it simmer for 2 or 3 whistles.
    2. Then soak the tamarind in half a cup of water and take the juice. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils, vermicelli and green chillies.
    3. Then add onion and tomato and fry well. Then add the cabbage, stir fry well, then add the steamed lentils and sambar powder,then add the sour water and bring to a boil for a while to go green, then sprinkle with coriander and the cabbage sambar is ready

 

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER