தேவையானவை :
1. கம்பு மாவு - 1 கப்
2. உப்பு - சிறிதளவு
செய்முறை :
1. முதலில் கம்பு மாவுடன் உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதனை கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும்.
2. பின் அந்தப் பாத்திரத்தை நீர் உள்ள குக்கரில் வைத்து மூன்று விசில் விடவும்.
சுவையான, சத்தான கம்பு களி தயார்.
சூடான கம்பு களியை, புளி அல்லது கீரை குழம்புடன் சாப்பிடலாம். இதனை பெரிய உருண்டைகளாக்கி தண்ணீரில் போட்டு வைத்து மோருடன் கலந்தும் சாப்பிடலாம்.