மட்டன் வெள்ளை குருமா (mutton white kurma)

post-img

தேவையானவை:
மட்டன் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 4 கீறியது
தேங்காய் -1/2 முடி
கசகசா - 2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
சோம்பு -1 டீஸ்பூன்
பட்டை -2
ஏலக்காய் -2
லவங்கம் -2
வெங்காயம் -1 கப் (நறுக்கியது)
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு - 5 பல்
முந்திரிப்பருப்பு - 4
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1.மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு, முந்திரியை அரைத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டுதாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். மட்டனை சேர்க்கவும்.
3. அரைத்த தேங்காயை ஊற்றிஉப்பு சேர்க்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.
4. கொத்தமல்லி இலையை சிறிது கிள்ளிப் போடவும். இப்போது மட்டன் வெள்ளை குருமா ரெடி. இதே முறைப்படிமட்டனுக்குப் பதிலாக காய்கறி சேர்த்து குருமா, உருளைக்கிழங்கு குருமா ஆகியவையும் தயாரிக்கலாம்.


Ingredients for Mutton White Kuruma :

Mutton-1/4 kg
Tomato- 1/4 kg
Green Chilies - 4(chopped)
Coconut - half Cup
Poppy Seeds - 2 tsp
Cashew Nuts - 4
Curd-1cup
Turmeric Powder-1/2 tbsp
Cinnamon, Cloves, Cardamom -each 2 pieces
Onion-1 Cup (Chopped)
Ginger - small piece
Garlic Paste- 5 pieces
Oil, Salt - as required.

Method to make Mutton White Kuruma :

1. Wash the mutton and boil it with adding water. Grind the Coconut, poppy seeds, ginger, garlic and cashew nuts and make them into paste.
2. Heat oil in a pan and roast the cinnamon, cloves and cardamom. Then add  the chopped onions, tomatoes and green chilies then stir it frequently. Then add the coconut paste along with them and fry them well.
3. Then add the cooked mutton along with them. Then add curd and salt to taste. Then add the fresh coriander leaves. After boiled turn off the stove.
Mutton White Kuruma is ready to serve.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER