தேவையானவை :
பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய காரட் துண்டுகள் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
பட்டை கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
- காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
- தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
- அவ்வளவுதான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.
INGREDIENTS for Green piece pulao:
Basmati Rice1cup
Green peas-1/2 cup
Chopped carrot pieces-1/2cup
Green Chilly-2
Ginger-small piece
Garlic-6 Flakes
Big Onion-1
Cinnamon, Cloves Powder-1/2tbsp
Oil+Ghee-2tbsp
Salt-Enough Need
PROCEDURE to make Green piece pulao:
- Grind ginger and garlic like a paste. Cut the onion and green chilies vertically.
- Cut the carrot like small pieces and wash the rice and keep aside.
- Heat oil and ghee in a pan, add cinnamon, cloves powder and let them splutter. Then add ginger, garlic paste.
- Then add onion, green chilly, carrot, green peas and fry them.
- Add rice along with prepared masala and stir them frequently.Then allow rice to get roasted, after that transfer it in to a pressure cooker, add 2 cup of water (for 1cup rice 2cup of water is sufficient) and allow 2 whistle and turn off the stove.
- Now green piece pulao is ready. Tomato kuruma, onion curd pachadi combination is good to taste with this pulao.