அகத்திக்கீரை கூட்டு

post-img

தேவையானவை :

1. அகத்திக்கீரை - 1 கட்டு2. பாசிப்பருப்பு - 50 கிராம்3. துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்4. வரமிளகாய் - 35. கடுகு - 1 டீஸ்பூன்6. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்7. உப்பு - தேவையான அளவு8. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.2. பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி!!

Required:

1. Spinach (Agathikeerai) - 1 pack2. Moong Dal - 50 g3. Peeled coconut - 2 tbsp4. Chili - 35. Mustard - 1 tbsp6. urudu dal - 1 tbsp7. Salt - required amount
8. Coconut oil - 1 tbsp

 

Recipe:

1. First put the moong dal in a bowl and pour water in it and let it soak for an hour. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and vermicelli.2. Then put the spinach(Agathikeerai)in it and stir well, then wash the soakedmoong daland let it fry well. Then sprinkle the required amount of water in it, cover and keep boiling. Once the spinach is well fried, add salt and grated coconut and stir well until the spinach is ready !!

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER