தேவையானவை :
1. தினை - 250 கிராம்
2. பனை வெல்லம் - 200 கிராம்
3. பால் - 250 மி.லி
4. முந்திரிப் பருப்பு - 15
5. ஏலக்காய் - 5
6. உலர்ந்த திராட்சை - 15
7. நெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர்விட்டு, அதில் தினையைப் போட்டு நன்கு வெந்ததும், வெல்லத்தைத் தூளாக்கிப் போடவும்.
2. 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிட்டு, கடைசியாகப் பால் சேர்க்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும்.
3. கடைசியாக ஒரு கலக்குக் கலக்கி இறக்கும்போது, ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும்.பலன்கள்:இனிப்பில் ஏலக்காயைக் கடைசியாகப் போடுவது வெறும் வாசத்துக்கு மட்டும் அல்ல. இனிப்பின் சளி பிடிக்கும் தன்மையையும் செரிக்கத் தாமதிக்கும் மந்தத் தன்மையையும் ஏலம் சரிக்கட்டிப் பாதுகாக்கும்.