தேவையான பொருட்கள்:
விறால் மீன் துண்டுகள் - 6எண்ணெய்-தேவைக்கேற்பசின்ன வெங்காயம்-20பூண்டு-20வெந்தையம்-1/2 tspகறிவேப்பிலை-சிறிதளவுதக்காளி-2மாங்காய்-2புளி-1 tbspமிளகாய் பொடி-1tbspகொத்தமல்லி பொடி-2tspமஞ்சள்-1tsp
செய்முறை:
விறால் மீனை நன்றாக கழுவி அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டடி கொள்ளவும்.
மாங்காவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தையத்தையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.
அதில் வெங்காயம்,பூண்டு,மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பிறகு புளியை கரைத்து அதில் மிளகாய் பொடி,கொத்தமல்லி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து அதனுடன் மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு மீனை சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது விறால் மீன் குழம்பு தயார்.
கடைசியில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் மனம் கிடைக்கவும்.