தேவையானவை:
மட்டன் - அரை கிலோ
நெய் - 100 கிராம்
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - நான்கு(நறுக்கிக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - இரண்டு
விண்டாலு மசாலாவிற்கு:
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் - 12
ஏலக்காய் - 3
பூண்டு - 15 கிராம்
வினிகர் - 30 மில்லிகிராம்
செய்முறை:
1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும்.
2.மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அத்தோடு நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறவும். அத்துடன் மசாலா, தேவையான உப்பு சேர்க்கவும்.
3. இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும்.
4. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நான்காக வெட்டி மட்டனுடன் சேர்த்து கிளறவும்.குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
5.இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
Ingredients for Mutton Vindaalu :
Mutton - 1 /2 Kg,
Ghee - 100 g,
Fresh Coriander Leaves - 1 /2 bunch(chopped),
Onion - 4 (chopped),
Potatoes - 2,
For Vindaalu Masal :
Cumin - 1 Tsp,
Turmeric Powder - 1 /2 Tsp,
Kashmir Chilly - 12,
Cardamom - 3,
Garlic - 15 g,
Vinigar - 30 mg.
Method to make Mutton Vindaalu :
1. Wash the mutton well and chop into small pieces. Grind the masal such as cumin, turmeric powder, kashmir chilies, cardamom, garlic and vinegar.
2. Heat oil in a pan and fry the finely chopped onions till it gets golden colour. Add fresh coriander leaves along with them. Then add grinded masala paste and salt along with it.
3. Now add the chopped mutton and close the pan lid. Add some water until it gets boil and stir it often.
4. Then boil the potatoes and chop into some pieces. Then add this potatoes along with gravy. Boil it for 10 minutes.
Tasty Mutton Vindaalu is ready.