தேவையானவை:
1. சாமை அரிசி மாவு - 500 கிராம்
2. எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
3. கடுகு - சிறிதளவு
4. உளுந்து - ஒரு டீஸ்பூன்
5. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
6. சீரகம் - ஒரு டீஸ்பூன்
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. கொத்தமல்லி - சிறிதளவு
9. பொடியாக நறுக்கிய தக்காளி - 1
10. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 250 கிராம்
11. காய்ந்த மிளகாய் - 4
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. சாமை அரிசி மாவைச் சலித்து, அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து புட்டு பதத்துக்குப் பிசைந்து, ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து, ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவிடவும்.
2. கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு முறையே சேர்த்து, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும். பின், வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து நன்கு கலக்கவும். கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி வேகவிட்டு எடுத்தால் சாமைக் காரப் புட்டு தயார்.
Ingredients :
1. Little Millet Powder - 500 gm
2. Oil - 3 tbsp
3. Mustard - Little
4. Splitted Blacckgram - 1 tsp
5. Bengalgram - 1 tsp
6. Cumin - 1 tsp
7. Curry Leaves - little
8. Coriander leaves - little
9. Chopped Tomato - 1
10. chopped small onion - 250 gm
11. Dry red chillies - 4
12. Salt - as needed
Method :
1. First Sieving the millet flour, add cumin, salt along it. Then knead like pudding. marinate it for 5 minutes. Then boil it in idly cooker for 10 minutes.
2. Heat oil in a pan, add mustard, blackgram, bengalgram, curry leaves, small onion, chillies, tomato and salt one by one. Fry and stir until oil seperates. Then add boiled flour pudding along it and stir well. Sprinkle the coriander leaves and turn off the stove.