மட்டன் ஸ்டூ(Mutton Stoo)

post-img

தேவையானவை :

மட்டன் - அரை கிலோ
காலிபிளவர் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 200 கிராம்
பட்டை - 2
லவங்கம் - 2
தேங்காய்ப் பால் - 2 கப்
கேரட் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 6
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. மட்டன் மற்றும் காய்கறிகளை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. மட்டன், காய்கறிகளைச் சேர்த்து, இடித்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி மட்டன் மற்றும் காய்கறிகளை வேக விடவும்.

3. கலவை வெந்து சுண்டிய பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும். ஆப்பம், இடியாப்பம், தோசை ஆகியவற்றிற்கு இந்த `ஸ்டூ' தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Ingredients for Mutton Stoo :

Mutton - 1 /2 Kg,
Cauli Flower - 100g,
Green Beans - 100g,
Ginger, Garlic Paste - 2 Tsp,
Onion - 200g,
Cloves - 2,
Cinnamon - 2,
Coconut Milk- 2 Cup,
Carrot - 100g,
Green Chilies - 6,
Oil - as needed,
Salt - as needed.

Method to make Mutton Stoo :

1. Wash all the vegetables and wash the mutton well and make the mutton into pieces. Take a vessel , pour some oil and allow it to boil then add cloves, cinnamon and season it well. Then add chopped onions and then fry them well.
2. Add Ginger, Garlic paste and grinded green chilies and salt with vegetables and mutton. Pour some water and allow it to boil for some minutes.
3. When it is boiled and reduced some amount of water then add coconut milk into the vessel. Then take off the vessel from the stove. This Mutton Stoo is tasty for all kinda dosa varieties.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER